வேலூர்:கீழப்பாவூர் யூனியனில் யூனியன் தலைவரின் கணவர் மற்றும் உறவினர்கள் தலையீடு அதிகமாக உள்ளது பரபரப்பு குற்றச்சாட்டு!!!
11/21/2024
0
கீழப்பாவூர் யூனியன் கூட்டத்தில் யூனியன் தலைவருக்கு எதிராக திமுக காங்கிரஸ் உறுப்பினர்கள் எட்டு பேர் தீர்மானத்தில் கையெழுத்திட மறுப்பு அண்ணா திமுக உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றம் பரபரப்பு கீழப்பவர் யூனியன் சாதாரண கூட்டத்தில் திமுக யூனியன் தலைவருக்கு எதிராக துணை தலைவர் தலைமையில் திமுக காங்கிரஸ் கவுன்சிலர்கள் எட்டு பேர் தீர்மான நோட்டில் கையெழுத்திட மறுத்த நிலையில் அண்ணா திமுக கவுன்சிலர்கள் மூன்று பேர் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது கீழப்பாவூர் யூனியன் சாதாரண கூட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள யூனியன் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது யூனியன் தலைவர் காவேரி சீனித்துறை தலைமை வகித்தார் துணைத்தலைவர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார் கூட்டத்தில் கவுன்சிலர்கள் உதயசூரியன் நாகராஜன் முருகேசன் தர்மராஜ் வலன்ராஜா ஜான்சி பேமா மகேஸ்வரி ராஜேஸ்வரி ராதா குமாரி மேரி மாதவன் கனக ஜோதி புவனா அருமை சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர் திமுகவை சேர்ந்த நான்சி அண்ணா திமுக சேர்ந்த சுரேஷ் கலந்து கொள்ளவில்லை கூட்டத்தில் பேசிய கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் பாரபட்சம் காட்டுவதாகவும் எவ்வித அடிப்படை பணிகளும் நிறைவேற்றப்படவில்லை எனக் கூறியும் பணிகள் நிறைவேற்றுவதில் ஒன்றிய தலைவரின் உறவினர்கள் உள்ளிட்ட சிலர் தலையீடு இருப்பதாகவும் கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் மேலும் இதனை கண்டித்து துணை சேர்மன் முத்துக்குமார் தலைமையில் திமுக காங்கிரஸ் கவுன்சிலர்கள் ராஜேஸ்வரி மகேஸ்வரி பலன்ராஜா ஜான்சி ராதா குமாரி கனக ஜோதி மேரி மாதவன் உள்ளிட்ட எட்டு பேர் தீர்மான நோட்டில் கையெழுத்து இட வில்லை தங்களது அதிருப்தியை தெரிவித்தனர் இருப்பினும் சேர்மன் மற்றும் அண்ணா திமுக கவுன்சிலர்கள் சரவணன் தீர்மான நோட்டில் கையெழுத்திட்டதால் அனைத்து தீர்மானங்களும் நிறைவேறிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர் கீழப்பாவூர் யூனியன் பொறுத்த வரையில் திமுகவைச் சேர்ந்த காவேரி சீனித்துறை சேர்மன் ஆகவும் காங்கிரசைச் சேர்ந்த முத்துக்குமார் துணை சேர்மனாக உள்ளார் திமுக சேர்மனுக்கு எதிராக துணை சேர்மன் தலைமையில் திமுக காங்கிரஸ் கவுன்சிலர்கள் எட்டு பேர் தீர்மான நோட்டில் கையெழுத்து இடாமல் இருந்தாலும் மூணு பேர் உள்ளிட்ட ஒன்பது பேர் ஆதரவாகிவிட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மேலும் யூனியன் தலைவர் தனது உறவினர்களுக்கு சலுகைகள் வழங்குவதாக இருந்த குற்றச்சாட்டு அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது தேர்தல் வரும் நேரத்தில் ஏற்கனவே தென்காசியில் உட்க்கட்சி பூசல் நிறைய இருக்கும் பொழுது கீழப்பாவூரில் இச்சம்பவம் திமுகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் இதில் யூனியன் தலைவரின் கணவர் தலையீடு அதிகமாக இருப்பதாக அப்பகுதி திமுக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் முனுமுனுத்தது பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது
