வேலூரில் வங்கி மேலாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை!!!
11/21/2024
0
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் வங்கி மேலாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னாடி வங்கி மேலாளர் ஜமால் மொய்தீன், வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளின் சார்பில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர் .இதில் வங்கிகளை பயன்படுத்துவதற்கும், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மாணவ ,மாணவிகளுக்கு வழங்குவது குறித்தும் ஆலோசனை நடந்தது குறிப்பிடத்தக்கது.
