திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பழைய கட்டிடங்களை இடிக்கும் பணி நடைபெற்றது இடித்தவர்கள் இதில் உள்ள இரும்பு கம்பி, கதவு,ஜன்னல்,என முக்கியமானவற்றை எடுத்துக் கொண்டு கருங்கற்களையும் செங்கல் தூள்களையும் மற்றும் தேவையற்ற பொருட்களை அங்கேயே விட்டு சென்றுள்ளனர்,இந்த அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தான் கலைக்கல்லூரி இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது இவ்வளவு மாணவ மாணவர்கள் படிக்கும் இடத்தில்,விளையாடும் இடங்களில் நடக்க முடியாத அளவிற்கு உள்ளது பள்ளிக்கு கரிசல்பட்டி, குய்யவ நாயக்கன்பட்டி, கோவிந்தாபுரம், தெத்துப்பட்டி, பண்ணைப்பட்டி, வெள்ளமருத்துப்பட்டி, கன்னிவாடி பேரூராட்சி பகுதியில் உள்ள மாணவர்கள் இங்கு வந்து படித்து வருகிறார்கள் எடுத்தவர்கள் வந்து சுத்தம் செய்வார்களா அல்லது மாணவர்களே செய்ய வேண்டுமா என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
திண்டுக்கல் கன்னிவாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு பாதி மண் கற்கள் அப்படியே விட்டுச்சென்ற ஒப்பந்ததாரர் எங்கே? தேடும் பொதுமக்கள்!!!
11/10/2024
0
