தேனி: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் நடவடிக்கை எடுப்பரா?
11/21/2024
0
தேனி வட்டாரப்போக்குவரத்து அலுவலகம் புரோக்கர்களின் பிடியில் இருப்பதால் பொதுமக்கள் புலம்பல்.தேனி வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்திற்கு லைசன்ஸ் (விண்ணப்பித்தல், புதுப்பித்தல்)மற்றும் பல வேலைகள் தொடர்பாக தினமும் ஏராளமான மக்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.குறிப்பாக நேரடியாக ஆர்டிஓ வையோ அது சம்பந்தமான அதிகாரிகளையோ பார்க்க முடியவில்லை என்றும் புரோக்கர்கள் இருக்கிறார்கள் அவர்களை தொடர்பு கொள்ளுங்கள் என்றும் கூறும் நிலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.அலுவலகத்தில் எங்கு பார்த்தாலும் புரோக்கர்கள் காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவிப்பதோடு அவர்களிடம் சென்றால் அதிகமான பணம் கேட்பதாகவும்கூறுகின்றனர். லைசன்ஸ் எடுப்பதற்காகபாமர ஏழை மக்கள் சென்றால் அவர்களிடம் 10000முதல் 15000வரை புரோக்கர்கள் வசூலிப்பதாக மக்கள் புலம்பல்.அதிக பணம் எதற்கு என்று பொதுமக்கள் புரோக்கர்களிடம் கேள்வி கேட்டால் ஆர்டிஓ, சூப்பிரண்டு மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளை கவனிக்க வேண்டும் என்றும், அப்படி அவர்களை கவனித்தால்தான் உங்கள் வேலை முடியும் என்றும் புரோக்கர்கள் தெரிவிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும்,லைசன்ஸ் விண்ணப்பித்தல் மற்றும் புதுப்பித்தல் தொடர்பாக பொதுமக்கள் வட்டார போக்குவரத்து அதிகாரிகாரிகளிடம் நேரிடையாக சென்று கேட்டாலும் அந்த அதிகாரிகளே வெளியே புரோக்கர்கள் உள்ளார்கள் அவர்களை தொடர்பு கொள்ளுங்கள் என்று அனுப்புவதாக மக்கள் பரவலாக பேசி வருகின்றனர். கிராமப்புறங்களிலிருந்து வரும் படிப்பறிவில்லா மக்களிடம் அதிக வசூல் வேட்டை நடத்துவதால் பொதுமக்கள் புலம்பியவாறே செல்வது தினமும் நடக்கிறது.பாமர ஏழை மக்களிடம் பணத்தை பணம் என்றும் பாராமல் சுரண்டி எடுக்கும் புரோக்கர்களின் பிடியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உள்ளதால் மக்கள் கண்ணீருடன் காட்சி தருகின்றனர். இதுகுறித்து தேனி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புரோக்கர்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம்.
