திங்கள் முதல் வருகின்ற நவம்பர் 10 - ம் தேதி வரை இந்த ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது. நாளொன்றுக்கு பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வரும் இளைஞர்களுக்கு தேதி ஒதுக்கப்பட்டுஉள்ளது.அதனைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து பல்வேறு மாநிலங்களில் இருந்து வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கோவை நோக்கி படையெடுத்து வந்து கொண்டு உள்ளனர். மேலும் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வருகை ஒட்டி கோவை ரயில் நிலையத்தில் அதிகளவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது.10"ம் தேதி வரை நடைபெறும் இந்த தேர்வில் அதிகளவில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து பல்வேறு பகுதியில் சேர்ந்தவர்கள் கோவை நோக்கி வந்து கொண்டு உள்ளனர். தங்கும் வசதி, உணவு வசதி, கழிப்பறை வசதி என அடிப்படை வசதிகள் இன்றி பரிதவித்து வந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்த காவல்துறை துணை ஆணையர் ஸ்டாலின் அவர்களுக்கு அருகில் உள்ள தனியார் மண்டபலங்களின் தங்குவதற்கு ஏற்பாடு செய்து அவர்களை காவல்துறை வாகனங்களில் ஏற்று அனுப்பி வைத்தார் - இதனை அங்கிருந்து வழக்கறிஞர் பைசல் என்பவர் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்து அவரது தொலைபேசியில் எடுத்த வீடியோக்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.இதனைக் கண்ட வட மாநில இளைஞர்கள் காவல் துறையினருக்கு நன்றிகளை தெரிவித்து சென்றனர்.

