இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உத்தமபாளையம் ஒன்றியக் குழு சார்பில் நவம்பர் 7 ரஷ்ய புரட்சி தினமான தம்மிநாயக்கன்பட்டி கிளையில் கிளை செயலாளர் தோழர் ரா.சதீஸ் தலைமையில் இராணுவவீரர் V.பாலசுப்பிரமணி அவர்கள்கொடியேற்றினார். இதனை தொடர்ந்து தேவாரம் மேற்குகிளையில் கிளை செயலாளர் தோழர் க.ஆறுமுகம் தலைமையில் தோழர் பரமன் அவர்கள்கொடியேற்றினார். மேலும்,தேவாரம்கிழக்கு கிளையில் கிளை துணை செயலாளர் தோழர் ரா.ஈஸ்வரன் தலைமையில் ஒன்றிய குழு உறுப்பினர் தோழர் வை.பழனிச்சாமி கொடியேற்றினார். பண்ணைப்புரம் கிளை செயலாளர் தோழர் C.முத்தையா தலைமையில் தோழர் வனராஜ் கொடியேற்றினார்.கோம்பை கிளையில் தோழர் R.கரந்தன் அவர்கள் தலைமையில் கொடியேற்றப்பட்டது. தொடர்ச்சியாக டைமண்நகர் கிளை தோழர் தங்கமாயி தலைமையில் தோழர் E.முத்துலட்சுமி கொடியேற்றினார். T.சிந்தலைச்சேரி கிளைதோழர் S.உவரிஅந்தோணி தலைமையில் ஒன்றிய பொருளாளர் தோழர் M.சூசை கொடியேற்றினார்.
உத்தமபாளையம் கிளை தோழர் M.சுருளிவேல் தலைமையில் AIYF ஒன்றிய செயலாளர் தோழர் K காளீஸ்வரன் அவர்கள் கொடியேற்றினார்.தொடர் நிகழ்வாக தேவாரத்தில் மாமேதை தோழர் லெனின் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதைசெலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் தோழர் வீ.பாண்டி, மாவட்ட செயலாளர் தோழர் கி.பெருமாள் மற்றும் ஏராளமான தோழர்கள் திரளாக பங்கேற்று சிறப்பித்தனர்.
