ரெட்டியார்சத்திரம் ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து கிளைகளிலும் திமுக கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது வடக்கு ஒன்றியத்தில் திமுக இளைஞர் அணி சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து கிளைகளிலும் திமுக கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. முருநெல்லி கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பார்வையற்றோர் இல்லத்தில் மாவட்ட அவைத்தலைவர் காமாட்சி தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ரெட்டியார்சத்திரம் வடக்கு ஒன்றியத்தில் திமுக இளைஞர் அணிசார்பில்முருநெல்லிக்கோட்டை, கே,புதுக்கோட்டை, குருநாதநாயக்கனூர், ஆகிய கிராம ஊராட்சிகளில் துணை முதல்வர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து கிளைக்கழகங்களிலும் திமுக கொடியேற்றி இனிப்புகள் வழங்கி, பட்டாசுகள் வெடித்து கொண்டாடப்பட்டது. முருநெல்லிக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட ஆதரவற்றோர் மற்றும் பார்வையற்றோர் இல்லத்தில் நடைபெற்ற அன்னதானத்திற்கு வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் மணி தலைமை தாங்கினார். முருநெல்லிகோட்டை ஊராட்சி மன்றதலைவர் சின்னு (என்ற) முருகன்முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட அவைத் தலைவர் காமாட்சி கலந்து கொண்டு ஆதரவற்றோருக்கு உணவுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ரமேஷ், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய துணைத் தலைவர் ராஜேஸ்வரி தமிழ்செல்வன், மாவட்ட கவுன்சிலர் சுப்புலட்சுமி சண்முகவேல், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் அமைப்பாளர் மலைச்சாமி, பாண்டியராஜன், ஒன்றிய கவுன்சிலர்கள் காளீஸ்வரி மலைச்சாமி, நாகலட்சுமி ரமேஷ், ஒன்றிய அவைத் தலைவர் வெள்ளையன் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் பெருமாள்,செல்வகுமார், உட்பட திமுக நிர்வாகிகள் பலர்கலந்து கொண்டனர். படம். திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் முருநெல்லி கோட்டையில் உதயநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.