திண்டுக்கல் கன்னிவாடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா!!!
November 27, 2024
0
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கன்னிவாடி பேரூர் திமுக சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கிழக்கு மாவட்டதிமுக பொருளாளர் கு.சத்தியமூர்த்தி கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். விழாவிற்கு பேரூர் கழகச்செயலாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார் மேலும் விழாவில் அவைத்தலைவர் சர்புதீன், பொருளாளர் , பிச்சைமுத்து, மாவட்ட பிரதிநிதி பெருமாள், ஒன்றிய பிரதிநிதிகள் பழனிச்சாமி ,சரவணன், பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் பிரபு செல்வராஜ், நிர்வாகிகள் சிவராஜா, மயில்சாமி ,சின்னப்பன், தேவேந்திரன் உள்ளிட்ட சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். படம். திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கன்னிவாடி பேரூர் திமுக சார்பில் உதயநிதி பிறந்தநாள் விழா இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.