மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாவிழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தை திறந்து வைத்தார்!!!
11/25/2024
0
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ், சென்னை, சோழிங்கநல்லூர், கண்ணகி நகரில்மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் / மனம் சம்பந்தப்பட்ட மறுவாழ்வு சேவைகள் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள விழுதுகள் - ஒருங்கிணைந்த சேவை மையத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர். பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. எஸ். அரவிந்த் ரமேஷ், திரு. ஏ.எம்.வி. பிரபாகரராஜா, திரு. க. கணபதி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் திருமதி சிஜி தாமஸ் வைத்யன், இ.ஆ.பட மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் திருமதி எம். லக்ஷ்மி, இ.ஆ.பட தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுக் கழகத்தில் மேலாண்மை மேலாண்மை இயக்குநர் டாக்டர் கே. விஜயகார்த்திகேயன், இ.ஆ.ப, மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் திரு இரா. சுதன் இ.ஆ.பபு(ஓய்வு), மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
