மக்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழக அரசையும், தமிழக முதல்வரின் பெயரையும் கெடுக்கும் நோக்கில் உத்தமபாளையம் பேரூராட்சி துறையினரின் செயலால் மக்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். உத்தமபாளையத்தில் விகாசா வித்யாலயா பள்ளியின் பின்புறம் உள்ள தெருக்களில் பேரூராட்சி துறையினர் குழாய் பதிப்பதற்காக நன்றாக இருந்த சாலைகளைதோண்டிபோட்டுவிட்டுசரிவரமூடாமல்விட்டுசென்றுள்ளனர். இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் பிள்ளைகளும், அப்பாவி பொதுமக்களும் தினமும்பாதிப்படைந்துவருகின்றனர். குறிப்பாக தற்போது கனமழை பெய்து வருவதால் சாலைகள் மிகவும் மோசமடைந்து மக்கள் சென்றுவர இயலாத நிலை தொடர்கிறது.மேலும், இந்த சாலைகளால் அவரச ஊர்திகள் வந்து செல்ல முடியாத நிலையும் விகாசா பள்ளியின் பின்புறம் ஏற்பட்டுள்ளது.மழைக்காலங்களில் இந்த சாலையால் வாகன ஒட்டிகளும், பொதுமக்களும் கீழே விழும் சூழல் அன்றாடம் நிகழ்கிறது. தேனி மாவட்டதில் தங்கதமிழ் செல்வன் MP மற்றும் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் அவர்கள் ஓட்டுகேட்டுதான் வருகிறார்களே தவிர மக்களின் குறைகளை கேட்டறியவும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பிரசச்னைகளை பற்றி அறியவும் தொடர்பு கொள்ளமறுப்பதுஏன்இருக்கிறார்களா இல்லையா என மக்கள் ஆதங்கத்துடன்கேள்விஎழுப்பி வருகின்றனர்.இதனை கருதி உத்தமபாளையம் பேரூராட்சி துறையினர் தமிழக அரசுக்கு ஏற்படுத்தும் கலங்கதுக்குமுற்றுப்புள்ளி வைப்பார்களா பொறுத்திருந்து பார்ப்போம்.
தேனி: உத்தமபாளையம் பேரூராட்சியில் விடிவு காலம் எப்போது மக்கள் ஏக்கம்!!!
11/05/2024
0
