கோவை மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை செல்வராஜ் உடலுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி அஞ்சலி செலுத்தினார்!!!
11/09/2024
0
முன்னாள் அமைச்சர் - திமுக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர் முன்னாள் கோவை மேற்கு சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோவை செல்வராஜ், தனது வீட்டில் சுப நிகழ்ச்சியில் திருப்பதியில் கலந்து கொண்டு வரும் வழியில் மாரடைப்பால் மரணமடைந்தார். இவர் திமுக திமுக செய்தி தொடர்பாளராக உள்ளார்.முன்னாள்சட்டமன்ற உறுப்பினரும், திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் மாரடைப்பால் மரணம்.இவரது உடல் கோவை லாலி சாலையில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காகவைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அவருடன், திமுக சொத்து பாதுகாப்புகுழுதுணைத்தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் Ex Mla, வடக்கு மாவட்ட செயலாளர் தொஅ.ரவி, தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், பகுதி கழக செயலாளர் கார்த்திக் செல்வராஜ், மாமன்ற உறுப்பினர் சோமு சந்தோஷ், டவுன் ஆனந்த் உள்ளிட்ட பலர் வந்து அஞ்சலி செலுத்தினர்.கோவை செல்வராஜ் மறைவிற்கு முதல்வர் அவர்கள் ஏற்கனவே இரங்கல்தெரிவித்துள்ளார். மறைந்த கோவை செல்வராஜ் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு இன்று நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
