கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் ஒன்றியம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் 673 மாணவ, மாணவிகளுக்கு ரூ.32 இலட்சத்து 36ஆயிரத்து 660 மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கியும், பள்ளி மேம்பாட்டு மானிய 6-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 19 இலட்சம் மதிப்பில் ஆறு வகுப்பறை கட்டிடங்களின் கட்டுமான பணிகளுக்கு தமிழ்நாடு உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை
மாண்புமிகு அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப அவர்கள் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு.தே.மதியழகன்.,MLA அவர்கள் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் அரசுதுறை அலுவலர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நகர,பேரூர் கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள் அனைத்து அணிகளின்தலைவர்கள்,துணைதலைவர்கள்,அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானவர்கள்கலந்துக்கொண்டு சிறப்பித்தார்கள்...