கோவை:குழந்தைகளிடையே சாலை போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த குட்டி ரோடீஸ் 2024 குழந்தைகளுக்கான சைக்ளிங் நிகழ்ச்சி!!!

sen reporter
0


கோயம்புத்தூர் யுனைடெட் ரவுண்ட் டேபிள் 186 சார்பில் குட்டி ரோடீஸ் எனும் குழந்தைகளுக்கான சைக்ளிங் நிகழ்ச்சி கோவை கொடிசியா வளாகத்தில் இன்று காலை 6 மணி முதல் 11 மணி வரை  நடைபெற்றது. இது கோயம்புத்தூர் விழாவின் ஒரு நிகழ்வாக நடைபெறுகிறது.

கோவை மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று விழாவை கொடியசைத்து தொடங்கி வைத்தார். கோவை விஜிஎம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் வி.ஜி.மோகன் பிரசாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.கோவை மாநகர காவல் ஆணையர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் பேசுகையில்,குழந்தைகள் மற்றும்  ​​​​பெரியவர்களாகிய நம்மில் பெரும்பாலோர் வாகனம் ஓட்டும்போது பாதுகாப்பிற்கு முதலிடம் கொடுக்க மறந்துவிடுகிறோம். குற்றச்செயல்களால் ஏற்படும் இழப்பை விட சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகம் என்று அவர் குறிப்பிட்டார். "உங்களுடைய மற்றும் அனைவரின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுங்கள், சாலையில் வாகனம் ஓட்டும்போது கவனமுடன் , சாலைவிதிகளை பின்பற்றி வாகனம் ஊட்ட வேண்டும் என  அவர் வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சி மூலம் குழந்தைகளுக்கு சாலை விதிகளைப்பற்றிய விழிப்புணர்வு சிறு வயது முதலே அவர்களுக்கு கற்பிக்க படுகிறது, என்றார்.நிகழ்ச்சி குறித்து கோயமுத்தூர் யுனைடெட் ரவுண்ட் டேபிள் 186 உறுப்பினர்கள் கூறுகையில்:-குழந்தைகளுக்கு சாலை பாதுகாப்புகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது இந்நிகழ்வின் முக்கிய இலக்குகளில் ஒன்றாகும்.2019ல் இது முதன் முதலாக நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் ஆர்வமாக பங்கேற்றனர்.  இந்த ஆண்டு மூன்றாவது முறையாக நடைபெறுகிறது. இதில் 1000  க்கும் மேற்பட்ட  குழந்தைகள் கலந்து கொண்டனர்.

4 வயதிலிருந்து 15 வயது வரை உள்ள அனைத்து குழந்தைககள்  இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.இதில் 500 மீட்டர், 1 கிலோ மீட்டர், 2 மற்றும் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சைக்கிள் ஓட்டும் நிகழ்வுகள் நடைபெற்றது.

குழந்தைகள் எப்படி சாலை விதிகளை பின்பற்றி சைக்கிள் ஓட்ட வேண்டும் என்பதை பற்றி அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இது அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான மற்றும் பயனுள்ள ஒரு தருணமாக அமைந்தது.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கு தலைக்கவசம், காலை உணவு, டீ-ஷர்ட், பங்கேற்பு சான்றிதழ், பதக்கம் மற்றும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வை நடத்துவதன் மூலம் கிடைக்கும் நிதியை கொண்டு எங்கள் சமுதாய திட்டங்களில் ஒன்றான ' கல்வி மூலம் சுதந்திரம்' (Freedom Through Education) திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் புது வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் கட்டித் தர உள்ளோம்.கடந்த 19 ஆண்டுகளில் நாங்கள் 54 வகுப்பறைகளும் பல கழிப்பறைகளும்  கோவை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கட்டி தந்துள்ளோம்.

இந்திய ராணுவத்தின் ஆதரவுடன் கோயம்புத்தூர் யுனைடெட் ரவுண்ட் டேபிள் 186  சார்பில் காஷ்மீர் மாநிலம் கார்கிலில் உள்ள அரசுப் பள்ளியில் வகுப்பறை மற்றும் கழிப்பறைத் கட்டிடங்கள் கட்டி வருகிறோம். மேலும் கன்னியாகுமரியில் உள்ள அரசுப் பள்ளியில்  வகுப்பறை மற்றும் கழிப்பறை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த குட்டி ரோடீஸ் நிகழ்வின் மூலம் திரட்டப்படும் நிதியானது இந்த உன்னத முயற்சிக்கு ஆதரவாக முழுமையாகப் பயன்படுத்தப்படும்.இந்த நிதிகள் அனைத்தும் 100% சமூக நல திட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும், இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்வில் யுனைடெட் ரவுண்ட் டேபிள் 186 உறுப்பினர்கள் நவீன், கரண், அஷ்வின் குமார், பாலாஜி, கௌதம், நிஹால், விக்னேஷ் , பிரவீன் எட்வர்ட் மற்றும் அருண் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top