வேலூர் மாவட்ட வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிய மேலும் 2 நாட்கள் அவகாசம் எஸ்பி அறிவிப்பு!!!
December 02, 2024
0
வேலூர் மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி முதல் ஹெல்மெட் அணிய வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் அறிவுரைகளை வழங்கி இருந்தார். இதற்காக ஆங்காங்கே போக்குவரத்து காவல் துறை சார்பில் விழிப்புணர்வு விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி முதல் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை இயக்குபவர்களுக்கு தலா ரூபாய் 1000 அபராதம் ஸ்பாட் ஃபைனாக விதிக்கப்படும் என வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவிட்டிருந்தார். மேலும் ஆங்காங்கே எச்சரிக்கை பதாகைகளும் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் வேலூரில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் இந்த அபராதம் விதிக்கும் நடவடிக்கை மழை முடியும் வரை ஓரிரு நாட்கள் தள்ளி வைக்கப்படுகிறது என வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால் இந்த வாய்ப்பை இருசக்கர வாகன ஓட்டிகள் பயன்படுத்திக் கொண்டு விரைவில் ஹெல்மெட்டுகளை வாங்கி தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் ஹெல்மெட் அணியாமல் வாகனங்களை இயக்கக் கூடாது என்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் விடுத்துள்ள பத்திரிக்கை செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. ஆதலால் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறாது ஹெல்மெட் அணிந்து கொண்டு தங்களது இருசக்கர வாகனங்களை இயக்க வேண்டும் என்று வேலூர் மாவட்ட காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.