நீலகிரி மாவட்டம் உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்
திரு. மு. பெ.சாமிநாதன் அவர்கள், உதகையில் வீடு இடிந்து உயிரிழந்தவரின் உடலை நேரில் பார்வையிட்டு, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.4 இலட்சத்திற்கான அனுமதியாணையினை, அன்னாரது தாயாரிடம் வழங்கி, ஆறுதல் தெரிவித்தார். உடன் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்