திண்டுக்கல்:ரெட்டியார் சத்திரம் அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்!!!
December 11, 2024
0
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்களின் பதவி உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை பலமுறை பதிவாளருக்கு கோரிக்கை மனுக்களை சமர்ப்பித்தும் இதுவரை பதில் இல்லா நிலையில் பல்வேறு கட்ட போராட்டங்களை தொடர்ந்து தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் நேற்று அற வழியிலான உள்ளிருப்பு போராட்டத்தில் அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொண்டனர், முன்பிருந்த திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தால் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தால் முறையாக ஏற்றுக் கொள்ளப்பட்டும், எந்தவிதமான ஊதிய பயன்களும் இல்லாமல் பணியாற்றுவதால் அவர்களின் உரிமையை உறுதி செய்யும் வகையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், UGC & AlCTE வழிகாட்டுதலை பின்பற்றி நீண்ட காலம் தொடர்ந்து நிலுவிலேயே உள்ள பணி உயர்வு திட்டம்(CAS) உடனடியாக நிறைவேற்ற வேண்டிய அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியருக்கான பணி உயர்வு திட்டம் தொடர்ந்து தாமதப்படுத்துவது மற்றும் முரண்பாடுகள் குறித்து தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆழ்ந்த கவலையுடன் தெரிவிக்கின்றது, அண்ணா பல்கலைக்கழகத்தின் முக்கிய வளாகங்களான CEG கிண்டி எம்ஐடி எஸ்ஏபி மற்றும் ஏ.சி. டச் ஆகியவற்றில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பணி உயர்வும் பலன்களும் உடனடியாக வழங்கப்பட்டு வருகிறது அதே நேரத்தில் உறுப்பு கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு புறக்கணிக்கப்பட்டு வருகிறது எனவே பல்கலைக்கழக நிர்வாகமும் தமிழ்நாடு அரசும் முக்கிய பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கும் வரை இந்த போராட்டத்தை தொடர்ந்து நடத்த தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் உறுதியாக தெரிவிக்கிறது என ஆசிரியர்கள் தெரிவித்தனர், உள்ளிருப்பு போராட்டம் மூன்று மணி நேரம் நடைபெற்றது,