தேனி மாவட்டம் வீரபாண்டியில் ஸ்ரீ அகத்தியர் ஸ்ரீ லோபமுத்ரா குரு முனிவருக்கு குருபூஜை விழா!!!
12/19/2024
0
வீரபாண்டியில் அருள்பாளித்து கொண்டிருக்கும் ஸ்ரீ அகத்தியர் குரு பீடம் அகத்தியர் குருமுனிக்கு குருபூஜை விழாவானது நடைபெற்றது. அகத்தியர் குருபீடத்திற்கு முளைப்பாரி ஊர்வலம் நடைபெறு வந்ததை தொடர்ந்து இன்று வேள்வி மற்றும் 108மூலிகை அபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிவத்திரு. இரா. சிவாஜி சுவாமிகள் கூறுகையில் பழமையான சிவன் கோவில்களை உழவார பணி செய்து நல்லமுறையில் புதிப்பித்து பக்தர்கள் வருகையை அதிகப்படுத்த முன்னெடுப்போம் என்றார். மேலும், இந்நிகழ்வில் நிறுவனர் அகத்தியர் மெய்ஞான பீடம் அகத்தியர் பவுண்டேசன் மரு. டாக்டர். தாமரை கண்ணன் கூறுகையில் நவபாஷாணத்தால் அபிஷேகமும், ஆராதனைகள் பற்றியும் பக்தர்களுக்கு கூறினார். அதனை தொடர்ந்து ஸ்ரீ மாய பாண்டீஸ்வரர் மேல்மங்கலம் உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் திருக்கைலாய வாத்தியக் குழுவினர் கைலாய வாத்தியங்கள் முழங்க அகத்தியருக்கு அபிஷேகமும், ஆராதனைகளும் சிறப்பாக நடைபெற்றது.இதன் தொடர் நிகழ்வாக அகத்தியர் பீடத்திற்கு வருகை புரிந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
