வேலூர் விருப்பாட்சிபுரம், மாந்தோப்புப் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப்குமார் (60 வயது).இவர், வேலூர் மாநகராட்சியில் துப்புரவு செய்யும் பணியாளர்களின் பணிகளை மேற்பார்வையிடும் மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், அண்ணா சாலையிலுள்ள ஒரு பகுதி வழியாகச் சென்ற 11 வயது சிறுமியை மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார் ஜோசப்குமார். இது குறித்து சிறுமி, தனது பெற்றோரிடம் தெரியப்படுத்தியிருக்கிறார்.
அதிர்ச்சிக்குள்ளான பெற்றோர், உடனடியாக பாகாயம் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கின்றனர்.
பாகாயம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் நாகராஜன் தலைமையிலான போலீஸார், ஜோசப்குமாரை விரைந்து பிடித்து வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்த போலீஸார், மாநகராட்சி பணியாளர் ஜோசப்குமாரை கைது செய்து வேலூர் மத்தியச் சிறைச்சாலையில் அடைத்தனர்.
