கோவை: தனது உடலில் சாட்டையால் அடித்து கொண்ட பின் அண்ணாமலை பேட்டி!!!!

sen reporter
0

பெண்களுக்கு பாதுகாப்பு வழங்காத திமுக அரசை கண்டித்தும் அண்ணா பல்கலைகழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை நேரு நகர் பகுதியில் உள்ள தனது இல்லம் முன்பு நின்று எட்டு முறை சாட்டையால் அடித்துக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, மன்மோகன் சிங் நமது நாட்டிற்கு வகுத்து கொடுத்த பொருளாதார கொள்கையை எப்போதும் நினைவு கூறுவோம். 

நாங்கள் எடுத்துக் கொண்டுள்ள இந்த போராட்டம் வருகின்ற நாட்களில் இன்னும் தீவிர படுத்தபடும்.தனிமனிதனை சார்ந்தோ அல்லது தனி மனிதருக்கு ஆட்சியாளர் மீதுள்ள கோபத்தை காட்டவோ இந்தப் போராட்டம் கிடையாது. அடுத்த தலைமுறை அழிந்து கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.கல்வியின் தரம் கீழே வந்து கொண்டிருக்கிறது. 

போராக இருந்தால் கூட ஒரு பெண்ணின் மீது கை வைக்க கூடாது என்பது தமிழின் மரபு.பெண்கள் மற்றும் குழந்தைகள் தாயார்கள் மீது தொடுக்கபடக்கூடிய குற்றச்செயல்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டிருக்கிறது. 

எதற்காக இந்த சாட்டையடி முருகப்பெருமானிடம் எங்களுடைய வேண்டுதலை சாட்டைடியாக சமரிக்கப்படுகின்றோம். விரதம் இருக்கப் போகின்றோம்.ஆண்டவரிடம் முறையிட போகின்றோம். எல்லா மேடைகளிலும் திமுகவை தோலுரித்து காட்டப் போகின்றோம்.மூன்று ஆண்டுகளில் தமிழகத்தை எவ்வளவு பின்னால் கொண்டு போய் உள்ளது என்பதை  பற்றி பேசப்போகின்றோம். 

இந்த பாலியல் நிகழ்வு பெறும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.நன்றாக யோசித்து தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறோம். திமுக ஆட்சியில் இருந்து நகரும் வரை காலணியை நான் அணிய மாட்டேன் .அணியப் போவதில்லை. இது ஒரு வேள்வியாக தமிழக மக்களுக்கு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு செய்கிறேன்.

மன்மோகன் சிங் இறந்ததால் இன்று நடத்தப்பட இருந்த போராட்டங்கள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top