வேளாண் கடன் வழங்குவதில் முன்னனி கூட்டுறவு சங்கமாக கேரளாவில்,ஓரியண்டல் அக்ரோ மல்டிஸ்டேட் கோ-ஆப்பரேடிவ் சொசைட்டி நிறுவனம் செயல்பட்டு வருகின்றது..
இந்நிலையில் கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள விவசாயிகள் பயன் பெறும் விதமாக தமிழகத்தில் முதல் அலுவலகமாக கோவை காந்திபுரம் பகுதியில் ஓரியண்டல் அக்ரோ மல்டிஸ்டேட் கோ-ஆப்பரேடிவ் சொசைட்டி நிறுவனம் துவங்கப்பட்டது.
இதற்கானதுவக்கவிழா, நிறுவனத்தின் தலைவர் வர்கீஸ் தலைமையில்நடைபெற்றது. நிகழ்ச்சியில் நிறுவனத்தின் தலைமை ஒருங்கணைப்பாளர் பிரேமராஜன் முன்னிலை வகித்தார்.பிராந்திய மேலாளர் ராஜ்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக டாக்டர் சிவராமன் கலந்து கொண்டு தலைமை அலுவலகத்தை திறந்து வைத்தார்.இது குறித்து நிறுவனத்தின் நிர்வாகிகள் கூறுகையில்,நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிராமப்புறங்களில் உள்ள நலிவடைந்த பிரிவினரை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த நிறுவனம் துவங்கப்பட்டதாகவும்,
குறிப்பாக விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படுவதற்கு தேவையான கடன் உதவிகளை இந்த நிறுவனம் வழங்க உள்ளதாக தெரிவித்தனர்.
தற்போது முதல் அலுவலமாக கோவையில் துவங்கப்பட்டுள்ள நிலையில்,விரைவில் தமிழகத்தில் கூடுதலாக கிளைகள் துவங்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.நிகழ்ச்சியில் ஓரியண்டல் அக்ரோ மல்டிஸ்டேட் கோ-ஆப்பரேடிவ் சொசைட்டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நிதின் ராகவ்,மக்கள் தொடர்பு அலுவலர் சிவ்தாஸ்,
இயக்குனர்கள் ஜான்சன் பராக்கா,ஆல்பினோ தாமஸ்,பிராந்திய மேலாளர் மணி சோலையிழ்சிவபாலன்,சிவக்குமார்,அன்புராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்..