டாக்டர் அம்பேத்கர் நினைவு தினம் சமூக சேவகர் முரளி தலைமையில் மணிபண்டத்தில் மரியாதை அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.டாக்டர் அம்பேத்கர் 69வது நினைவு தினம் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சமத்துவ முன்னணி சமூக சேவை மையத்தின் சார்பில் அனுசரிக்கப்பட்டது. இதன் நிறுவனரும் சமூக சேவகருமான ஏ. எம். முரளி,ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். செம்மஞ்சேரி நகர்ப்புற மக்கள் வாழ்விட மேம்பாட்டு வாரியம் பகுதியில், சமூக ஆர்வலர் புயல் தேசிங் அன்னதானம் வழங்கினார். ஏ. எம். முரளி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளில்
சமூக ஆர்வலர்கள் புயல் தேசிங், சுருதி கணேசன், சேட்டு, செம்மஞ்சேரி பாஸ்கர், எம்ஆர்எஸ். எழிலன், கலை, சார்லி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று மாமேதை டாக்டர் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தினர்.