தமிழ்நாடு அரசு மயிலாடுதுறை வருவாய் மாவட்டம் பொது நூலக இயக்ககம் சார்பில் அயன் திருவள்ளுவரின் 133 அடி உயர திருவுருவ சிலை நிறுவிய வெள்ளி விழாவின் சார்பில் பேச்சுப் போட்டியானது " *குழல்* *இனிது* *யாழ்* *இனிது* " என்ற தலைப்பில் மயிலாடுதுறை மாவட்டத் துணை சார்ந்த தொடக்கப்பள்ளி மாணவர்கள் முதல் பெரியோர்கள் வரையில் 42 இருபால் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களின் பெற்றோர்கள், பார்வையாளர்கள்,ஆசிரியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் சீர்காழி மேலரத வீதியில் அமைந்திருக்கும் ச.மு. இந்து தொடக்கப் பள்ளியில் கலந்து கொண்டனர் இன்றைய நிகழ்ச்சிகளின் தலைமையினை புத்தூர் அரசு கலைக் கல்லூரியின் பேராசிரியர் கோ.சதீஷ்,வரவேற்புரையினை ச.மு.இந்து மேல்நிலைப் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியரும், உடற்கல்வி இயக்குனருமான எஸ். முரளிதரன் கூறினார், போட்டியின் நடுவர் பணியினை,
ச.மு.இந்து மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியர் பி. புலவேந்திரன், தமிழாசிரியர் டி. துரைமுருகன், மற்றும் ஆசிரியர் ரஞ்சித்குமார், ஆகியோர் பணியாற்றினர்.முதலிடத்திற்கு ₹ 5000., இரண்டாம் இடத்திற்கு ₹ 3000, மூன்றாம் இடத்திற்கு ₹ 2000 ரொக்க பரிசினை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இப்ப அரிசினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வருகின்ற 31ஆம் தேதி அன்று சீர்காழி கிளை நூலகத்தில் நடைபெறும் விழாவில் அளிக்க இருக்கின்றார்கள். போட்டியின் முடிவில் முதல் பரிசை கல்லூரி மாணவி மதுமிதா அவர்களும், இரண்டாம் பரிசை பள்ளி மாணவி கோகிலாவும், மூன்றாம் பரிசினை தொடக்க கல்வி பயிலும் மாணவர் விஷ்ணு பிரியன் என்ற சிறுவர் பெற்றார்.மேலும் நிகழ்வில் வாசகர் வட்ட தலைவர் லெ. பாபு நேசன், ஓய்வு பெற்ற ஆசிரியர் எம்.தங்கவேலு, ஜெ. வீரபாண்டியன் பேராசிரியர் சதீஷ், ஆசிரியர்கள் சேகர், ரஞ்சித், நிகழ்ச்சி ஏற்பாட்டினை சீர்காழி கிளை நூலக இரண்டாம் நிலை நூலகர் த.வெங்கடேசன் செய்திருந்தனர். நிறைவாக நூலகர் கி. அறிவராசன் நன்றிகூறினார்.

