கட்டட பணிகளை மிதந்து முடிக்க உத்திரவிட்டதோடு இந்த அரசு கல்லூரி தனியார்கல்லூரி போல அதிநவீன கட்டிட வசதி, ஆய்வக வசதியுடன் அரசு கல்லூரி அமைய உள்ளது என்றார்,
ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி அவர்களின் சீரிய ஏற்பாட்டால் சுமார் 98 கோடி மதிப்பில் ஆத்தூர் ஒன்றியத்தில் கூட்டுறவுத்துறை சார்பாக கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டப்பட்டு வருகிறது இதன் கட்டிட பணிகள் முடியும் தருவாயில் உள்ளது இதுபோல ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொண்டுவர திட்டமிட்ட அமைச்சர் பெரியசாமி அவர்கள்
கன்னிவாடி செல்லும் சாலையில் சுமார் 12 கோடி மதிப்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்ட ஏற்பாடு செய்தது அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது, ரெட்டியார்சத்திரம் பகுதியில் நலத்திட்ட பணிகளை ஆய்வு செய்ய வந்த அமைச்சர் பெரியசாமி அவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டப்பட்ட வரும் இடத்திற்கு வந்து கட்டிட பணிகளை ஆய்வு செய்து அப்போது கட்டிட பணிகள் தரமாக கட்ட வேண்டும் என்றும் கட்டிட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்
ஆய்வின் போது திமுக மாநில செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் குழு சத்யமூர்த்தி, சட்டமன்ற முகாம் அலுவலக அலுவலர் வட்டார வளர்ச்சி அலுவலர் வடிவேல் முருகன் அமைச்சரின் உதவியாளர் வத்தலகுண்டு ஹரிஹரன் திண்டுக்கல் மாமன்ற உறுப்பினர் நெல்லை சுபாஷ். ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரி அன்பரசு, துணை தலைவர் ரெங்கசாமி, ஒன்றிய குழு உறுப்பினர் காளீஸ்வரி மலைச்சாமி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கே. புதுக்கோட்டை ரமேஷ்,மாணவரணி அமைப்பாளர் செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர், ஆத்தூர் தொகுதியில் ஆத்தூர் ஒன்றியத்தில் கூட்டுறவுத்துறை சார்பாக கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் கிராமப்புற மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளன இதற்காக மாணவர்கள் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
