கோவையில் வாடிக்கையாளர்களுக்கு தங்கம் உள்ளிட்ட ரிவார்டுகளை அள்ளித்தர வேல்யூ ஒன் டிஜிட்டல் தளம் துவக்கம்!!!

sen reporter
0

இந்தியாவில் முதன் முறையாக வாடிக்கையாளர்கள் செய்யும் ஒவ்வொரு பர்சேஸிற்கும் தங்கம் பரிசு பெறுவதோடு வாடிக்கையாளர்களும் பங்கு தாரராக ஆகும் வகையில்   ‘வேல்யூ ஒன்’ எனும் புதிய இணையதள  செயலி துவக்கம்

உலக அளவில் டிஜிட்டல் தளங்கள்  பயன்பாடு   இந்தியாவில் பெருமளவில்  அதிகரித்து வருகிறது.குறிப்பாக வணிக பயன்பாடுகளில்  பண பரிமாற்றங்களை பெரும்பாலோனார் டிஜிட்டல் செயலிகள் வாயிலாகவே செய்து வருகின்றனர்.இந்நிலையில் இது போன்ற பயன் படுத்துபவர்கள் அதிகம் பலனளிக்கும் வகையில் வேல்யூ ஒன் எனும் செயலி மற்றும்  ஆன்லைன் தளம் அறிமுகமாகி உள்ளது.இதற்கான அறிமுக விழா கோவை , பி.எஸ்.ஜி., கல்லூரி ஐ.எம்., ஜேட் வளாகத்தில்நடைபெற்றது.இதில் வேல்யூ ஒன் பயன்பாடுகள் குறித்து நிறுவனத்தின் நிறுவனர் அருண் பிரகாஷ் செய்தியாளர்களிடம் பேசினார்…

கோல்டு ரிவார்டுகளை தரும்  ஸ்டோராக வேல்யூ ஒன்   ஆன்லைன் தளம், மூலமாக நாம் செலவழிக்கும் தொகையில், குறிப்பிட்ட சதவீதத்தை,  தங்கமாக  தரும் நிறுவனம் ஆகும். என தெரிவித்தார்.

குறிப்பாக இந்தியாவில் முதன்முறையாக வாடிக்கையாளரை பங்குதாரராக மாற்றும் ‘கஸ்டமர் கோ– ஓன்டு கம்பெனி’யாக, இது செயல்படுவதே தனிச்சிறப்பு என கூறினார்.இதற்கு, வேல்யூ ஒன் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் (www.value1.gold)அல்லது மொபைல் அப்ளிகேஷன் மூலம்,  இ.பி., வாட்டர், கேஸ் பில், கிரிடிட்கார்டு பில், இன்சூரன்ஸ், லோன் தவணைகளை செலுத்தி கொள்ளலாம். நீங்கள் செலுத்தும் தொகைக்கு இணையான, வேல்யூ பாய்ன்ட்ஸ் கிடைப்பதோடு, குறிப்பிட்ட சதவீதம், தங்கமாகவும் முதலீடு செய்யப்படும். அதாவது, நம் செலவழித்த தொகை்கு, குறிப்பிட்ட சதவீதம் தங்கத்திலும் முதலீடு செய்து கொள்ளலாம்.  செலவே, வரவாக மாற்றும் முறையாக இது உள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top