பொது மருத்துவர் சதீஷ்குமார், சித்தா மருத்துவர் உமாபிரபா லதா, பல் மருத்துவர் லேடி ஜான் பாய், உதவி செயற்பொறியாளர் காத்தவராயன், முக்கிய பிரமுகர் மணிகண்டன், உதவி மின் பொறியாளர் ரமேஷ் கண்ணன் ஒன்றிய துணைச் செயலாளர் திருப்பதி மாவட்ட காசநோய் நல கல்வியாளர் சென்றாய பெருமாள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் (பொ) கோபாலகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர்கள் தர்மராஜ், சீனிவாசன், வசந்த், செவிலியர்கள் ஜாய், முருகேஸ்வரி, முத்துலட்சுமி, சமுதாய நல செவிலியர் கோமதி பகுதி சுகாதார செவிலியர் இந்திராகாந்தி, அன்னலட்சுமி, காசநோய் பிரிவு மேற்பார்வையாளர் ராஜா மருந்து ஆளுநர் தினேஷ் குமார், தங்க முருகவேல் ஆய்வக நூற்பனர் ஜெகஸ்டின் கிராம சுகாதார செவிலியர் நித்தியா, சித்தா பிரிவு அருள் தாஸ், இளைஞர் அணி அமைப்பாளர் சிவா, ஆகியோர் கலந்து கொண்டு மற்றும் பொதுமக்கள் மருத்துவ சிகிச்சை பயன்பெற்றனர்.
திண்டுக்கல்:ரெட்டியார்சத்திரம் மாங்கரை ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்!!!
12/20/2024
0
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் மாங்கரை ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் பரமேஸ்வரி தலைமை வைத்தார். இந்த சிறப்பு முகாமை ரெட்டியார்சத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் ப.க. சிவ குருசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் ஆனந்த், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுமதி, வட்டார மருத்துவ அலுவலர் ஆராதனா ஆகியோர் முன்னிலை வைத்தனர், இம்முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை, மற்றும் இதயம், ரத்தம், சிறுநீர், ரத்த அழுத்த பரிசோதனை, தாய் சேய் நலம், காது மூக்கு தொன்டை,கண்,பல், தோல், எலும்பு மூட்டு, காசநோய், தொழுநோய், சித்தா மருத்துவம் ஆகிய மருத்துவ சிகிச்சை அளித்து இலவசமாக மாத்திரை மருந்துகள் வழங்கப்பட்டன,
