இந்நிகழ்வில் கண்டன உரை ஆற்றிய நா.கார்த்திக் ஆளுநர் மீண்டும் ஒருமுறை தமிழக சட்டப்பேரவை மரபை மீறி உள்ளதாக கூறினார். அதுமட்டுமின்றி தமிழ் தாய் வாழ்த்திற்கு அவமரியாதையை ஏற்படுத்தி உள்ளதாக கூறிய அவர் தமிழக அரசு கொண்டுவரும் பல்வேறு தீர்மானங்களை கிடப்பில் போட்டு விடுவதாகவும் குற்றம் சாட்டினார். எனவே ஆளுநரே திரும்பி போ என்ற முழக்கம் இன்று தமிழகம் முழுவதும் ஒலிக்கப்படுவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய பொங்கலூர் பழனிச்சாமி, ஆளுநர் தமிழக மக்களின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் அவர் செயல்பட்டை செய்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். யாரேனும் குற்றம் செய்தால் அவர்களது முதலாளியை தான் குற்றம் சொல்ல வேண்டும் என குறிப்பிட்ட அவர் கவர்னரை நியமித்துள்ள மோடியை தான் குற்றம் சொல்ல வேண்டும் என சாடினார். மோடி தமிழ்நாட்டிற்கு செய்யாத கெடுதல்களே கிடையாது எனவும் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய பல்வேறு நிதிகளை வழங்காமல் மோடி மௌன சாமியாராக இருப்பதாக விமர்சித்தார்.