"காப்பி ரெடி ஆன் வீல்ஸ்" என்ற எங்கள் கார்ட் மாடலை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறோம். போத்திஸ், தி சென்னை சில்க்ஸ், ரிலையன்ஸ் ரீடெய்ல்ஸ் மற்றும் இந்தியாவில் உள்ள பல முன்னணி பிராண்டுகளுடன் நாங்கள் அதிகாரப்பூர்வ காஃபி பார்ட்னர். எங்களின் முதல் காப்பி ரெடி ஆன் வீல்ஸ் நிலையத்தை தி சென்னை சில்க்ஸ், ஐந்து ரோடு, சேலத்தில் அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
இந்த விற்பனை நிலையத்தை திரு. மெடிக்கல் ராஜா (எ) அ. ராஜசேகரன், முன்னாள் தலைவர் சேலம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் அவர்களால் இன்று துவக்கி வைக்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக தி சென்னை சில்க்ஸ், திரு. சங்கர், கிளை மேலாளர் அவர்கள், காப்பி ரெடி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. கே. ராஜேஸ், அவர்கள் கலந்து கொண்டனர். காப்பி ரெடி நிர்வாக இயக்குநர் திரு. ராம்குமார் அவர்கள். அனைவரையும் வரவேற்றார்.
காப்பி ரெடியின் நிர்வாக இயக்குநர் அவரது உரையில், "நாம் புதிய நான்கு சக்கர வாகனம்/கார் வாங்கும் போது, அது வருடக்கணக்கில் தேய்மானம் அடைகிறது. ஆனால் ஒரு உரிமையாளர் காப்பியை ரெடி ஆன் வீல் (கார்ட்) விற்பனை நிலையத்தை உரிமம் எடுத்தால், உரிமையாளர் லட்சங்களில் சம்பாதிக்கலாம்" என்றார்.