கிருஷ்ணகிரி: ஃபெஞ்சல் மழையினால் பாதிப்படைந்த நெல், மஞ்சள், தக்காளி வாழை உள்ளிட்ட பயிர் சேதங்களை ஆணையர், சுற்றுலாத்துறை மற்றும் மேலாண் இயக்குநர் ஆய்வு!!!

sen reporter
0

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியம், காரப்பட்டு ஊராட்சி, வண்ணாம்பள்ளி கிராமத்தில், ஃபெஞ்சல் மழையினால் பாதிப்படைந்த நெல், மஞ்சள், தக்காளி, வாழை உள்ளிட்ட பயிர் சேதங்களை ஆணையர், சுற்றுலாத்துறை மற்றும் மேலாண் இயக்குநர் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திருமதி.ஷில்பா பிரபாகர் சதீஷ் இ.ஆ.ப. அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆணையர், சுற்றுலாத்துறை மற்றும் மேலாண் இயக்குநர் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள், காரப்பட்டு ஊராட்சி, வண்ணாம்பள்ளி கிராமத்தில் விவசாயி திரு.சின்னத்தம்பி த/பெ.கோவிந்தசாமி அவர்களின் 75 சென்ட் விவசாய நிலத்தில் நெல், தக்காளி, பூச்செடிகள் பயிரிடப்பட்டு ஃபெஞ்சல் மழையினால் பாதிப்படைந்ததையும், விவசாயிகள் திரு.மகாராஜன், திரு.பழனி த/பெ.கணேசன் ஆகியோர்களின் 2 ஏக்கர் விவசாய நிலத்தில் நெல், மஞ்சள் பயிர்கள் பாதிப்படைந்ததையும், விவசாயி திரு.மாரிகவுண்டர் அவர்களின் 1.16 ஏக்கர் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்ட நெல் பாதிப்படைந்ததை நேரில் பார்வையிட்டு, பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில், ஃபெஞ்சல் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேத மதிப்பீடுகள் குறித்தும், புல தணிக்கை குறித்து வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, பர்கூர் மற்றும் கிருஷ்ணகிரி வட்டங்களைச் சார்ந்த வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்களில், வேளாண்மைத்துறை சார்பாக 6381 விவசாயிகள் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பாக 1686 விவசாயிகள் என மொத்தம் 8067 விவசாயிகளால் பயிரிடப்பட்ட தக்காளி, நெல், வாழை, மஞ்சள், மரவள்ளிக்கிழங்கு, நிலக்கடலை, பருத்தி, கரும்பு, ராகி, உளுந்து, காராமணி, பச்சை பயிறு, பூச்செடிகள், காய்கறிகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களால்ஏற்கனவே கூட்டாக புல தணிக்கை செய்து, பாதிப்புகள் குறித்து தயார் செய்யப்பட்டுள்ள விவரங்கள் மற்றும் ஆவணங்களை நேரடியாக ஆய்வு செய்து பல்வேறு தகவல்களை துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், கிணறுகள், குளம், குட்டை, ஆழ்துளை கிணறு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து புகைப்படங்களுடன் கூடிய கருத்துருக்களை உடனடியாக அரசுக்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தினார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஃபெஞ்சல் புயல் மழையினால் பாதிக்கப்பட்ட 497 குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள், மாட்டுக்கொட்டைகள் ஆகியவற்றிற்கு ரூ.49 இலட்சத்து 21 ஆயிரத்து 500 மதிப்பில் நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், வெள்ளத்தினால் உயிரிழந்த 20 மாடுகள், 16 கன்றுகள், 23 ஆடுகள் மற்றும் 83 கோழிகளுக்கு ரூ.10 இலட்சத்து 23 ஆயிரத்து 300 மதிப்பில் நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது ஆணையர், சுற்றுலாத்துறை மற்றும் மேலாண் இயக்குநர் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திருமதி.ஷில்பா பிரபாகர் சதீஷ் இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.அ.சாதனைக்குறள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது).திரு.குமரன், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் திரு.ஷாஜகான், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் திரு.பச்சையப்பன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் திருமதி.இந்திரா, தனி வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) திரு.ஜெய்சங்கர், வட்டாட்சியர்கள் திரு.திருமால், திருமதி.வளர்மதி, திருமதி.சத்யா, திருமதி.பொன்னாலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.பாலாஜி, திருமதி.தவமணி மற்றும் வருவாய் துறை, வேளாண்மை துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை, ஊரக வளர்ச்சி துறை, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top