கோவையில் ஓகே பாஸ் (okboz) எனும் புதிய செயலி அறிமுகம்!!!

sen reporter
0

அறிமுக சலுகையாக  முதல் பயணமாக  ஒரு ரூபாயில் டாக்சி சவாரி.போக்குவரத்து,உணவு,மளிகை  உள்ளிட்ட பொருட்கள் வினியோகம் மற்றும் வீடுகளுக்கு தேவையான அத்தியாவசிய சேவைகள் என 50 க்கும் மேற்பட்ட சேவை வசதிகள் கொண்ட ஓகே பாஸ் (OKBOZ) செயலி கோவையில் அறிமுகம் செய்யப்பட்டது.

கோவையை சேர்ந்த இளைஞர் தாம் துவங்கி உள்ள ஸ்டார்ட் நிறுவனத்தின் வாயிலாக ஓகே பாஸ் எனும் புதிய மொபைல் செயலியை உருவாக்கி உள்ளார். உணவு,போக்குவரத்து,அத்தியாவசிய வீட்டு தேவைகள் என அனைத்து வசதகளையும் ஒரே செயலியில் பயன்படுத்தும் விதமாக உருவாக்கி உள்ள ஓகேபாஸ் செயலியின் அறிமுக விழா ராமநாதபுரம் பகுதியில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவில் புதிய செயலியை தலைமை செயல் இயக்குனர் செந்தில்,வர்த்தக மேம்பாட்டு மேலாளர் சிவசங்கர்,விற்பனை அதிகாரி பிரதீப் குமார் ஆகியோர் அறிமுகம் செய்தனர்.இதில் புதிதாக  அறிமுகம் செய்யப்பட்ட   செயலியின் பயன்பாடுகள்   குறித்து தலைமை செயல் இயக்குனர் செந்தில் பேசினார்.பல்வேறு சேவைகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள ஓகேபாஸ் (okboz) செயலியை பதவிறக்கம் செய்து கொண்டால், பிப்ரவரி 1 முதல் 28 வரை சிறப்பு சலுகையாக ஒரு ரூபாய்க்கு டாக்சியில் பயணம் செய்ய முடியும்.இதன் முதல் சேவையாக கால் டாக்ஸி சேவையை செயல்படுத்த உள்ளோம்.பிப்வரி 1 முதல் பிப்ரவரி 28 வரை இதில் புக்கிங் செய்து பயன்படுத்துவோருக்கு முதல 2.5 கி.மீ.,க்கு ஒரு ரூபாய் மட்டுமே கட்டணம். அடுத்து வரும் கிலோ மீட்டருக்கு வழக்கமான கட்டணம் இருக்கும்.குறிப்பாக   வீட்டு பழுது சரி செய்வது முதல் அழகுசாதனை சேவைகள் வரை ஐம்பது வகையான  சேவைகள் இந்த செயலியில் இருப்பதாக கூறிய அவர்,

இலவச ஆம்புலன்ஸ் உடனும் இணைந்து செயல்படுத்தப்படும் இந்த திட்டம் கோவை மக்களின் அன்றாட வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும். 2025 ஆண்டுக்குள் ஒரு லட்சம் பயனாளர்களாக விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளோம். விரைவில் திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களிலும் சேவைகள் வழங்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top