திண்டுக்கல்:ஸ்ரீராமபுரம் பேரூராட்சியில் வார்டு சபா கூட்டம் நடைபெற்றது!!!
1/25/2025
0
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் ஸ்ரீராமபுரம் பேரூராட்சியில் வார்டு சபா கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் சகிலா ராஜா தலைமை வைத்தார். மேலும் செயல் அலுவலர் சிவகுமார் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் முருகேசன், தலைமை எழுத்தர் துரைப்பாண்டி ஆகியோர் முன்னிலை வைத்தனர். வார்டு சபா கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி. தெருவிளக்கு. மகளிர் உரிமைத்தொகை மற்றும் பல்வேறு கோரிக்கைகள் வைத்தனர். இதற்கு முன்னதாக ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இருந்து முக்கிய வீதிகளில் மாணவ மாணவர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியாக பேரூராட்சி அலுவலகம் வரை சென்றனர். மாணவ மாணவிகள் பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு பதாகை உடன் கோஷங்கள் எழுப்பி சென்றனர். மேலும் திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதி மொழி எடுத்தனர். மேலும் செம்பட்டி ஒட்டன்சத்திரம் சாலையில் கருப்பு மடம் முதல் திருமலைராயபுரம் பள்ளி வரை இருபுறங்கள் உள்ள பிளாஸ்டிக்கை பேப்பர்களை தூய்மை பணியாளர்களை கொண்டு பேரூராட்சி கவுன்சிலர்வுடன் இணைந்து சுத்தம் படுத்தும் பணியை மேற்கொண்டனர்.
