தேனி மாவட்டம்:ஆண்டிபட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கிலிருந்து அதிமுக பிரமுகர்கள் விடுதலை!!!
1/30/2025
0
கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பாக அறிவிக்கப்பட்ட போடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் ஆகியோர்களை ஆண்டிபட்டி அருகே உள்ள கனவாய் மலை தர்ம சாஸ்தா கோவில் முன்பு அப்போதைய ஒன்றிய கழக செயலாளர் K.பால்பாண்டியன், மாவட்ட மாணவரணி பொருளாளர் P.முருகேசன் ராஜதானி P.S.நடராஜன் மற்றும் M.P.பழனி ஆகியோர் தலைமையில் தேர்தல் விதிமுறைகளை மீறி அனுமதியில்லாமல் 70 க்கும் மேற்பட்டவாகனங்களில் கழக நிர்வாகிகளை அழைத்துச் சென்று வேட்பாளர்களை வரவேற்றதாக வழக்கு தொடரப்பட்டு 14 ஆண்டுகள் நடைபெற்று வந்தன.வழக்கு பல வருட காலங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த வழக்கிலிருந்து இன்று அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
