கோவை மயில்மார்க் சம்பா ரவை குறித்து சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் வீடியோவை தொடர்ந்து அந்த வீடியோ வதந்தியென காவல் ஆணையாளரிடம் அந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் புகார் அளித்துள்ளனர்!!!

sen reporter
0

சம்பா ரவை தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மயில் மார்க் சம்பா ரவை(தனியார்) நிறுவனம் மீது ரவிகாந்த் என்ற நபர் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் பரப்பி தங்கள் நிறுவனத்திற்கு களங்கம் விளைவித்துள்ளதாகவும் அந்த வீடியோவில் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் பொய் என்றும் எனவே அந்த நபர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மயில் மார்க் சம்பா ரவை நிறுவனத்தினர் கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் அளித்தனர்.

இது குறித்து பேசிய நிறுவனத்தின் உரிமையாளர்கள் பொன்முருகன், பாலசுப்பிரமணியம் மற்றும் செந்தில்குமார், முகம் தெரியாத ஒரு நபர் தங்கள் நிறுவனம் மீது சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்பி வருவதாக தெரிவித்தனர். மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் தவறான செய்திகளை பரப்பி வருவதாகவும் அதனை மக்கள் நம்பி விடக்கூடாது என்பதற்காக உரிய ஆதாரங்களை மாநகர காவல் ஆணையாளரிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்தனர். விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை உணவில் பயன்படுத்தியிருப்பதாக அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் அதற்கான ஆதாரம் இல்லாமல் போலியான தகவல்களை பரப்பி வருவதாக தெரிவித்தனர். 

புதிய நிறுவனம் ஒன்று துவங்க இருப்பதாகவும் அவர்கள் செய்திருக்கலாம் என்ற சந்தேக தொணியில் பேசிய அவர்கள் இதுபோன்ற செய்வது கீழ்த்தரமான செயல் என்றும் முறையற்றது எனவும் விமர்சித்தனர். மேலும் இது குறித்து சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு தொடுத்து இருப்பதாக கூறிய அவர்கள் மக்கள் இதனை நம்ப வேண்டாம் எனவும் தங்கள் உணவு தரமானது என்பதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக தெரிவித்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top