கோவை: உலக கோப்பையை வென்ற கோ கோ இந்திய அணியில் இடம் பெற்ற கோவை வீர்ருக்கு உற்சாக வரவேற்பு!!!

sen reporter
0

கோ கோ உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்று அசத்தி  கோவை திரும்பிய  வீரர் சுப்ரமணிக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.அண்மையில் ஆண்களுக்கான கோ கோ இறுதி போட்டியில்   இந்தியா, நேபாளம் அணிகள் மோதின. அபாரமாக ஆடிய பிரதிக் கிரண் தலைமையிலான இந்திய அணி 54-36 என்ற கணக்கில் 18 புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.இந்த அணியில் கோவையை சேர்ந்த சுப்ரமணி  இடம் பெற்று சிறந்த அட்டாக்கர் விருதும் பெற்றார்.இந்நிலையில் கோவை திரும்பிய சுப்ரமணிக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.சிறு வயது முதலே சிங்காநல்லூர் என்.ஜி.இராமசாமி நினைவு ஸ்போர்ட்ஸ் கிளப்பில் பயிற்சி பெற்று   மாவட்ட,மாநில,தேசிய  அளவிலான கோ கோ போட்டியில் கலந்து கொண்டு விளையாடி உள்ள மாணவர் சுப்ரமணி தற்போது உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்து கோவைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இந்நிலையில் கோவை வந்த சுப்ரமணிக்கு  விமான நிலையத்தில் தியாகி என் ஜி இராமசாமி நினைவு விளையாட்டு கழகத்தின்  பொறுப்பாளர்கள், தலைவர் அமிர்தராஜ்.  துணைத் தலைவர்கள் சிவசங்கர், கண்ணப்பன். செயலர்,விஜயகுமார், பொருளாளர் அசோக்குமார் மற்றும் குழுப் போட்டி பொறுப்பாளர் பத்மநாபன் ஆகியோர்  சால்வை அணிவித்தும் பூச்செண்டுகள் வழங்கி தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர். கோ கோ  உலகக் கோப்பையை  முதல் முறையாக வென்ற  இந்திய அணியில் கோவையை சேர்ந்த சுப்ரமணி இடம் பெற்றது  குறிப்பிடதக்கது..

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top