அதன் காரணமாக ஆக்கிரமிப்புகளால் பொது மக்கள் பல இன்னல்களுக்கும் மன உளைச்சலுக்கும் விபத்துக்கள் ஏற்பட்டு பள்ளிக் குழந்தைகள் பள்ளி செல்லும் நேரத்தில் பல இடையூறுகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். குறிப்பாக மக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதியான சாரமேடு மெயின் ரோட்டில் மட்டும் ஒரு மாநகராட்சி பள்ளி மற்றும் நான்கு தனியார் பள்ளிகள் அமைந்துள்ளது. ஆகவே, மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மேயர் இந்த மனுவை கவனத்தி்ல் எடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மனித உரிமைத்துறை சார்பாக ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் மனித உரிமை துறை மாநில செயலாளர் ஜான்சன் தலைமையில் வழங்கப்பட்ட இந்த மனுவின் போது ,இமயம் ரஹ்மத்துல்லா,கார்த்திக்,ஜெரால்டு வின்சென்ட்,கோட்டை இஸ்மாயில்,குறிச்சிகனி,சுலைமான், ஹனீபா,அப்பா,மீரான் உசேன்,ஹைதர்அலி,முத்து, நவ்ஃபல்,ஹாரீஸ்,நிர்மல்,கோபி,அமீர் பாஷா,திவா ஆனந்த்,ராஜா முகம்மது,இப்ராஹீம் ஆகியோர் உடனிருந்தனர்..

