வால்பாறை:அருகே விறகு வெட்ட வேண்டாம் எனக் கூறிய மூதாட்டியை அருவலால் தாக்கி அடித்துக் கொலை,தனிப்படை!!!

sen reporter
0

 கோவை மாவட்டம் வால்பாறை அருகே ரொட்டிக்கடை லோயர் பாரளை பகுதியில் தனியார் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான தொழிலாளர் குடியிருப்பில் சரோஜினி (72) என்பவர் குடியிருந்து வந்துள்ளார்,சரோஜினி பணி ஓய்வு பெற்று கோவையில் மகன் வீட்டில் உள்ளார், பொங்கல் தினத்திற்கு வால்பாறைக்கு பென்ஷன் பணம் வாங்க வந்த சரோஜினி அவரது வீட்டில் தனியாக இருந்த வந்துள்ளார் அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் தாக்கியது அடுத்து ரத்த வெள்ளத்தில் துணிகள் விலகிய நிலையில் ரத்த காயங்களுடன் சரோஜினி உயிரிழந்துள்ளார், இதுகுறித்து வால்பாறை காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தகுமார் சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி சம்பவம் இடத்திற்கு   மோப்ப நாய் உதவியுடன் போலீசார் துப்பு துலக்க ஆரம்பித்தனர்,கோவை மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில்.ஏ டி எஸ் பி சுரேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது,இந்த தனிப்படையில் துணைக் கண்காணிப்பாளர்கள் கிருஷ்ணா,ஸ்ரீநிதி, ஆய்வாளர்கள் ஆனந்தகுமார் தாமோதரன், சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் இந்த சம்பவத்தில் மூன்று பேரை சந்தேகத்தின் பெயரில் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுனர்  இதில் லோயர் பாரளை எஸ்டேட் தொழிற்சாலை அருகில் குடியிருந்து வரும் ரங்கநாதன் (24) அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டத்தில் ரங்கநாதன் குடிபோதையில்  சம்பவ  நாள் அன்று சரோஜினி வீடுஅருகே மரம் வெட்ட சென்றுள்ளார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சரோஜனியை  ரங்கநாதன் தான் வைத்திருந்த அருவாளால் தலையில் அடித்து தாக்கியுள்ளார் உள்ளார் இதனால் மயக்கம் அடைந்த சரோஜினி தூக்கிக்கொண்டு ரங்கநாதன் சரோஜினி வீட்டில் உள்ளே போட்டுவிட்டு சென்றுவிட்டார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சரோஜினி ரத்தம் வெள்ளத்தில் இருந்து இறந்துள்ளார்  என்பதும் மூதாட்டியை கொலை செய்துள்ளார் என்பது தனிப்படை போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து ரங்க நாதனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்,இந்த கொலைச் சம்பவம் வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top