வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் காளாம்பட்டு ஊராட்சியில் பழைய ஆரம்ப சுகாதார நிலையத்தை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்ட சுமார் 40 லட்சத்தில் டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டர் எடுத்தவர் செல்வா வேலை செய்ய முற்பட்ட போது ஊராட்சி மன்றத் தலைவர் பானுப்பிரியா மற்றும் அவருடைய ஆதரவாளர்களுடன் வந்து இங்கு கட்டடம் கட்டக்கூடாது. வேறு இடம் பார்க்க வேண்டும் என்று கூறி வேலையை தடுத்து நிறுத்த முற்பட்டனர். பிறகு ஊர் பொதுமக்கள் இந்த இடத்தில் தான் மருத்துவமனையை கட்ட வேண்டும் என்று கடுமையக வாதிட்டனர்.
