திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் தமிழ்நாடு அரசின் வேளாண்மை துறையின் சார்பில் சிறு தானிய உணவுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறுதானிய உணவு திருவிழா நடைபெற்றது. விழாவில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் சிறுதானியங்கள் கண்காட்சியினை பார்வையிட்டு சிறப்புரையாற்றினார். நிகழ்வில் கோவை, மதுரை, திண்டுக்கல், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறுதானியங்கள் மூலம் தயாரிக்கப்படக்கூடிய, உணவுகள் எண்ணெய் வகைகள், வேளாண்மை துறையின் உரங்கள், ஃபேஸ் வாஷ் கிரீம்கள், உள்ளிட்டவை தனியார் நிறுவனங்கள் மூலம் கண்காட்சி படுத்தப்பட்டது.
நிகழ்வில், வேளாண்மை இணை இயக்குனர் பாண்டியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் லீலாவதி,மாவட்ட மகளிர் திட்ட செயல் அலுவலர் சுதாதேவி, வேளாண்மை துணை இயக்குனர்( மத்திய அரசு) அமலா, வேளாண்மை துணை இயக்குனர் (மாநில அரசு) காளிமுத்து பயிர் பாதுகாப்பு தொழில்நுட்ப வல்லுநர்கள் , ஷாஹின்தாஜ், முனைவர் அபூபக்கர், சித்திக், முருகேசன் அமிர்தவர்ஷினி, மோனிகா, வேளாண் அலுவலர்கள் அப்துல் காதர் ஜெய்லானி, நல்லமுத்து உள்ளிட்ட வேளாண்மைதுறை அலுவலர்கள்,விவசாயிகள் கலந்து கொண்டனர்.
