தென்காசி: மும்பையில் தேசிய அளவில் நடந்த ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் பெற்று சொந்த ஊருக்கு திரும்பிய மாணவ மாணவிகள்!!

sen reporter
0


 மும்பையில் தேசிய அளவில் நடந்த ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் பெற்று சொந்த ஊருக்கு திரும்பிய மாணவ மாணவிகளுக்கு தென்காசி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

 மும்பையில் கடந்த 8 மற்றும் 9ம் தேதிகளில் தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகள் நடந்தது. இதில் தமிழகத்திலிருந்து 70 மாணவ,மாணவிகள் பங்கேற்றனர். குறிப்பாக தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகம் சார்பில் 14 மாணவ, மாணவிகள் பங்கேற்று வெற்றி பெற்றனர். தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ பள்ளி மாணவி வர்ஷா 2 தங்கம் மற்றும் 1 வெண்கலம், வினித்குமார் 1 வெண்கலம், இனிஜாஸ்ரீ 1 வெண்கலம், இந்திரஹரி 1 வெண்கலம், ஹரிணி 1 வெண்கல பதக்கமும், 5 வயதிற்குட்பட்ட பிரிவில் மேலகரம் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவர் இஸ்வின்ராஜா 1 வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கங்களும், தென்காசி அருள்மிகு செந்திலாண்டவர் பள்ளி மாணவர்கள் மகாதேவ் 1 வெண்கல பதக்கமும், மாணவர் பிரணவ் 3 தங்க பதக்கமும், சங்கரன்கோவில் ஏபிசி வீரபாகு பள்ளி மாணவர் சுதேவ் நாராயணன் 1 வெள்ளி பதக்கமும், சங்கரன்கோவில் கோமதிசங்கர் பள்ளி மாணவர் மாதவ் 1 வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கமும், கோமதிஅம்பாள் பள்ளி மாணவர் நிவாஷ் 1 வெண்கல பதக்கமும், 

ராயல் பப்ளிக் பள்ளி மாணவர் சித்தேவ் நாராயணன் 3 தங்கப்பதக்கமும், பண்பொழி செயின்ட் ஜோசப் பள்ளி மாணவர் ரோகித் 1 வெண்கல பதக்கமும், தென்காசி வேல்ஸ் வித்யாலயா பள்ளி மாணவர் மாதேஷ் 1 வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கமும், பெற்று சாதனை படைத்தனர். அதிலும் 8 பேர் தேசிய அளவில் முதலிடம் பெற்று தங்கம் வென்றுள்ளனர்.

இந்நிலையில் போட்டிகளை முடித்துக் கொண்டு நேற்று தென்காசிக்கு திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு தென்காசி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ மாணவிகளையும், பயிற்சி அளித்து மும்பைக்கு அழைத்துச் சென்ற பயிற்சியாளர் பாக்கியராஜ் ஆகியோரை மாணவ, மாணவிகளின் உறவினர்கள், மற்றும் பொதுமக்கள் சால்வை மற்றும் மலர் மாலைகள் அணிவித்து உற்சாகமாக வரவேற்பளித்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top