அதற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை எதிர்க்கட்சிகள் நடத்தி வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியின் கோவை மாவட்ட சிறுபான்மை துறை சார்பாக உக்கடம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை தலைவர் பஷிர் தலைமையில் நடைபெற்றது மேலும்
கோவை மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை மாநகர், தெற்கு, வடக்கு இணைந்து நடத்திய இதில்,சிறுபான்மை துறை மாநில தலைவர் முகம்மது ஆரீப் தலைமை தாங்கினார்..
இதில் முன்னால் சட்டமன்ற உறுப்பினர்எம்.என்.கந்தசாமி, வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.சிமனோகரன்,சிறுபான்மை துறை மாவட்ட தலைவர்கள் உட்பட காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை துறை மாவட்ட தலைவர்கள் உமர் கத்தாப்,எம்.எம் ஹாரூன்,தாவூத் அலி முகமது ஹாரிஸ்,முகமது இஸ்மாயில், அப்துல்லா அசார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில்,நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகள், கூட்டு குழுவில் இடம் பெற்றிருந்த எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் பரிந்துரையை நிராகரித்து. முஸ்லீம் மக்களின் வக்பு சொத்துக்களை கொள்ளையடிக்கும் எண்ணத்தோடு. ஒன்றிய பாஜக அரசு நினைத்த திருத்தப்பட்டுள்ள புதிய வக்பு சட்ட திருந்த மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கிய பாராளுமன்ற கூட்டுகுழுவின் ஜனநாயக படுகொலையை கண்டித்தும், மணிப்பூர் கலவரத்தில் தொடர்ந்து கிறிஸ்தவ தேவாலயங்களும், மக்களும் தாக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த கோரியும். இந்திய சுதந்திரத்தை கொச்சை படுத்தி பேசிய RSS தலைவர் மோகன் பகவத் மீது நடவடிக்கை எடுக்க வற்புறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டது .ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள்,பெண்கள் என ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோசங்கள் எழுப்பினர்...
