வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் அண்ணா நினைவு நாள் அனுசரிப்பு!!!
2/03/2025
0
வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திரு உருவ படத்திற்கு வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமது சகி, மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் எம் எல் ஏ,மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு,மாநகராட்சி மேயர் சுஜாதா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்,ஒன்றிய,நகர,பகுதி, பேரூராட்சி கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள்,கழக தோழர்கள் உடன் இருந்தனர்.
