சமீபத்தில், மத்திய அரசு 2025-26 ஆம் ஆண்டிற்கான யூனியன் பட்ஜெட்டில் ‘விக்சித் பாரத் @ 2047’ திட்டத்தின் கீழ் பெண்களின் பொருளாதார செயல்பாடுகளில் பங்குகொள்ளுதலை 70% வரை அதிகரிப்பதை முக்கிய இலக்காகக் கொண்டு அறிவித்துள்ளது. இந்த பறந்த வரம்புள்ள இலக்கை அடைய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் முக்கியமாக பெண்கள் தலைமையில் தொடங்கப்படும் ஸ்டார்ட்-அப்களுக்கு ஆதரவளிப்பதும் அடங்கும்.
இந்தியாவில் 3 கோடி பெண்கள் சொந்தமான புதிய நிறுவனங்களை உருவாக்கும் திறன் பெற்றுள்ளனர், இதனால் 150 முதல் 170 மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். இந்தியாவில் உள்ள MSME ஸ்டார்ட்-அப்களில் 20% பெண்கள் தலைமையில் உள்ளன, மேலும் இதில் 45% தொடங்கி வளர்ந்து வரும் நகரங்கள் (Tier-2 & Tier-3 cities) சேர்ந்தவையாகும். குறிப்பிடத்தக்க வகையில், கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 6.22 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் 'உதயம்' போர்டலில் பதிவு செய்துள்ளனர், இது MSME நிறுவனங்களை பதிவு செய்ய உதவியாக இருக்கிறது.
முக்கியமாக, 2021 ஏப்ரல் மாதம் முதல் செயல்பாட்டில் உள்ள Start-up India Seed Fund Scheme (SISFS) திட்டத்தின் கீழ் 1,278 பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட்-அப்களுக்கு மத்திய அரசு ரூ.227.12 கோடி நிதியை ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், Alternative Investment Fund (AIF)வாயிலாக 149 பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட்-அப்களில் ரூ.3,000 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசால் ஆதரிக்கப்படும் 1,52,139 ஸ்டார்ட்-அப்களில் 73,151 (48%) நிறுவனங்களுக்கு குறைந்தது ஒருவராவது பெண் இயக்குநராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்கள் தொழில் முனைவோருக்கு ஆதரவு அளிக்க, Department for Promotion of Industry and Internal Trade (DPIIT)மூலம் ரூ.24.6 கோடி அளவுக்கு கடன் உத்திரவாதம் வழங்கியுள்ளது.
மேலும், Fund of Funds for Start-ups (FFS)Scheme திட்டத்தில் மொத்த நிதியின் 10% பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட்-அப்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. Start-up India Portal-ல் ஒரு பிரத்யேக இணைய பக்கம் உருவாக்கப்பட்டு, மத்திய மற்றும் மாநில அரசுகள், பெண் தொழில்முனைவோர்களுக்கு வழங்கும் ஆதரவுகளை வெளியிடுகிறது.
இதனுடன், Women Capacity Development ப்ரோக்ராமம் மூலம் பெண்கள் தொழில் வளர்ச்சியில் சிறந்த வரைமுறைகளை பகிர்ந்து கொள்வதற்கும், இந்திய வர்த்தக சூழலில் தேர்ந்தெடுக்கப்பட்ட வணிக மாதிரிகளை புரிந்துகொள்வதற்கும் மத்திய அரசு ஒரு உகந்த சூழலை உருவாக்க முயல்கிறது.
இத்தகைய திட்டங்களை அறிவிப்பதன் மூலம், பெண்கள் நிதி ஆதரவு, பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி, அவர்களை தொழில் தொடங்கவும் வளர்க்கவும் வலு சேர்க்கிறது. மத்திய அரசின் இந்த முக்கிய முயற்சிகள் பொருளாதார துறையில் பாலின சமத்துவத்தை ஏற்படுத்தவும், பெண் தொழில் முனைவோர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
