மிகுந்த பதற்றத்தில் இருந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த பெரியகுளம் நகராட்சியின், 16 வது வார்டு கவுன்சிலர் கிஷோர் பானு நூர் முகமது, பெரியகுளம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இதன் காரணமாக பல லட்சரூபாய் மதிப்பிலான பொருள்களும் மற்றும் பொதுமக்களின் குடியிருப்புகளும் பாதுகாக்கப்பட்டன. மக்களின் பதற்றத்தை போக்கும் வகையில், மக்களை காக்கும் பணியில் ஈடுபட்ட வார்டு கவுன்சிலரின் செயலை அப்பகுதிவாழ் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.
தேனி மாவட்டம்: பற்றிய தீ பதறிய மக்கள் களத்தில் கவுன்சிலர்!!!
2/19/2025
0
தேனி மாவட்டம், பெரியகுளம் தண்டுபாளையம் பகுதியில், கிடுகு பின்னும் தொழில் நடைபெற்று வருகின்றது. பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தென்னை மட்டைகள் வைக்கப்பட்டு, அப்பகுதி பொது மக்கள் கிடுகு பின்னும் குடிசைத் தொழிலில், ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் நேற்று இரவு சுமார் 8:30 மணியளவில் திடீரென தீ பற்றி எரிந்தது. இதனால் பொதுமக்கள்

