வேலூர்: கே.வி.குப்பம் மேற்கு ஒன்றியத்தில் ஜெ.ஜெயலலிதாபிறந்த நாள் விழா கொண்டாட்டம்!!!
2/24/2025
0
அதிமுக முன்னாள் பொதுச் செயலாளரும்,தமிழக முன்னாள் முதல்வருமான மறைந்த ஜெ.ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாள் விழா கே.வி.குப்பம் பேருந்து நிலையம் அருகில் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர்.கே.எம்.ஐ.சீனிவாசன் தலைமையில்கொண்டாடப்பட்டது.அதில், அதிமுக பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு 2026-ல் ஆட்சி அமைப்போம்என்று உறுதிமொழியை எடுத்து கொண்ட னர்.நிகழ்ச்சிக்கு முன்பு அதிமுக கொடி ஏற்றப்பட்டு,பின்பு ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மாலையணிவித்துமரியாதை செய்து, பொதுமக்களுக்கு இனிப்புகள்வழங்கப்பட்டது. பிப்.27- அன்று மாலை ஸ்ரீசாலைமாரியம்மன் ஆலயம் அருகில் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவையொட்டி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது .
