வேலூர்:இந்தி சமஸ்கிருதத்தை திணிக்கும் ஒன்றிய பிஜேபி அரசை கண்டித்து திராவிட கழகம் சார்பில் அனைத்து கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!!!
2/24/2025
0
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பஸ் நிலையத்தில் அனைத்து கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்! இந்த ஆர்ப்பாட்டத்தில் வேலூர் திராவிட கழக மாவட்ட தலைவர் வி. இ. சிவகுமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் உ. விஸ்வநாதன் வரவேற்றார். மாவட்ட மகளிரணி தலைவர் இ.ராஜகுமாரி ஒருங்கிணைத்தார். வேலூர் மாவட்ட காப்பாளர் வி.சடகோபன் தொடக்க உரையாற்றினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன், நகர மன்ற தலைவர் சௌந்தர்ராஜன், மாநில அமைப்பு செயலாளர் விசிக, நீல சந்திரகுமார், திமுக மருத்துவர் அணி தலைவர் முகமது சயி உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு உரையாற்றினர். இர. அன்பரசன், க.சிகாமணி, மு.சீனிவாசன், க.சையத் அலீம்,ச.ஈஸ்வரி, பொ .தயாளன், ந.தேன்மொழி, மாநகரத் தலைவர் சந்திரசேகரன், தா. பாண்டியன், யுவன் சங்கர் ராஜா, இளைஞரணி தலைவர் இ.தமிழ்தரணி, மாணவரணி சங்க நிதி மற்றும் தி.மு.க, காங்கிரஸ் கட்சி, சிபிஐஎம், சிபிஎம், வி.சி.க, மதிமுக கட்சியை சேர்ந்த தோழர்கள் உள்ளிட்ட அனைத்து கட்சி பொறுப்பாளர்களும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இறுதியில் நகரத் தலைவர் சாந்தகுமார் நன்றி, உரையாற்றினார்.
