கோவை வித்யா மந்திர் பள்ளியின் ஆறாவது ஆண்டு விழா!!!

sen reporter
0


 




கோவை தொட்டிபாளையம் பிரிவு பகுதியில் உள்ள கோவை வித்யா மந்திர் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சியில் மாணவ,மாணவிகள் நடத்திய கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன…

கோவை அவினாசி சாலை தொட்டிபாளையம் பிரிவு பகுதியில் செயல்பட்டு வரும் கோவை வித்யா மந்திர் பள்ளியில் ஆறாவது  ஆண்டு  விழா நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடைபெற்றது.

பள்ளியின் தாளாளர் பிரதேவ் ஆதிவேல் தலைமையில் நடைபெற்ற விழாவில்,இணை தாளாளர் ஆஷாஜனனி முன்னிலைவகித்தார்.நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரபல ஊடகவியாளர் சாணக்யா சேனல் நிறுவனர் ரங்கராஜ் பாண்டே கலந்து கொண்டு மாணவ,மாணவிகளிடேயே உரையாடினார்.

அப்போது பேசிய அவர்,மாணவர்கள் கல்வி கற்கும் போது நல்ல  பண்புகளை வளர்த்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.கல்வி பயிலும் போதே மாணவர்கள் தங்கள் தனித்திறன்களையும் வளர்த்தி கொள்வது அவசியம் என குறிப்பிட்டார்.விழாவில் கவுரவ அழைப்பாளராக எம்.ஏ.கே.குழுமங்களின் தலைவர் மாணிக்கம் அத்தப்ப கவுண்டர் கலந்து கொண்டார்.

 

விழாவில் மாணவ,மாணவிகள் தங்களது பன்முக திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தின இதில் பல்வேறு நாடுகளின் கலாச்சார நடனங்கள்,தமிழர் வீரக்கலைகளை கூறும் விதமாக சிலம்பம்,வாள் வீச்சு,போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.குறிப்பாக பல்வேறு வண்ண  உடை அணிந்த மழலை குழந்தைகள் மேடைகளில் ஆடிய நடனம் பார்வையாளர்களை வெகுவாககவர்ந்தனமுன்னதாக கடந்த கல்வி ஆண்டில் சிறந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் மற்றும் மாவட்ட,மாநில  விளையாட்டு போட்டிகளில்  சிறந்தவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிகவுரவிக்கப்பட்டது. விழாவில் பள்ளி முதல்வர் கலைவாணி உட்பட ஆசிரிய,ஆசிரியைகள் ஊழியர்கள் மாணவ,மாணவிகள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்…

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top