இன்றைய தினம் டெல்லி தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கிறது, இறுதி கட்டத்தை வாக்கு எண்ணிக்கை எட்டிக் கொண்டிருக்கிறது, 27 ஆண்டுகளுக்குப் பிறகு 1998 பிறகு பாரதிய ஜனதா கட்சி தலைநகரலே மீண்டும் ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. டெல்லியில் 2015ல் பத்து,12 வயது இருக்கிற குழந்தைகள் போட்டி போட்டுக் கொண்டு கையில் விளக்கு மாத்தோடு இருப்பார்கள். ஆனால் இந்த முறை நான் டெல்லி சென்ற பொழுது அது அங்கு தென்படவில்லை. நான் டெல்லியில் இருந்து மதுரை திரும்பி உடன் பத்திரிகையாளர்களிடம் கூறிய, தலைநகரில் தாமரையின் ஆட்சி வருகிறது என்று கூறினேன். 2015-ல்-ஆமா நீ எழுவதற்கு 65 சீட்டுகள் வாங்கி இருந்தனர், ஆனால் பாஜகவோ மூன்று சீட்டுகளை மட்டுமே பெற்றது. ஆனால் இந்த முறை 48 வாங்கி இருக்கிறது.. இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் என்றால், பிரதமர் மோடி அரசாங்கத்தின் திட்டங்கள், மக்கள் இதயத்தை தொட்டிருக்கிறது. இரண்டாவது ஆம் ஆத்மி கட்சியினுடைய ஊழல், அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு Thug போன்றவர், இந்த வார்த்தைக்கு நான் முழுமையான பொறுப்பை ஏற்றுக் கொண்டு கூறுகிறேன், அவரங்கு லோக்கல் Thug போன்று ஆட்சி செய்து கொண்டிருந்தார். யமுனா நதியில் விஷத்தை கலந்து விட்டது ஹரியானா அரசாங்கம். டெல்லியில் இருக்கும் மக்களை இன படுகொலை செய்வதற்காக, genocide என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார். இதை மக்கள் ரசிக்கவில்லை , ஏனென்றால் முதலில் ஆம் ஆத்மி கட்சி என்றால் தொப்பி,மப்ளர், ஹவாய் செருப்பு என்றுதான் இருந்தது. இது இதுதான் கெஜரிவாலுக்கு தோற்றம் கொடுத்தது. ஆனால் இன்றைய அளவில் கெஜ்ரிவால் உடைய பாத்ரூம், டாய்லெட் pad தங்க plate ஆல் செய்யப்பட்டது அதுமட்டும் இல்லாமல் சாராய ஊழல் நிரூபிக்கப்பட்டது. அவர் செய்த சாராய ஊழல் பற்றி கம்பளைண்ட் கொடுத்ததே காங்கிரஸ் கட்சி தான். காங்கிரஸ் கட்சி கொடுத்த புகாரின் மீது அந்தந்த துறையை சார்ந்தவர்கள், எடுத்த நடவடிக்கைதான். இதற்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் மத்திய அரசாங்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. அதேபோல ஜீரோ எம்.எல்.ஏ வில் ஹட்ரிக் வாங்கிய ராகுல் காந்திக்கும் காங்கிரஸ்க்கும் மனமார்ந்த வாழ்த்து சொல்கிறேன் என்று கூறினார். அந்த அளவுக்கு காங்கிரஸ் டெல்லியில் துடைத்தெறியப்பட்டுள்ளது, ராகுல் காந்தி பார்லிமென்டில் பேசுகிறார், நான் பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் மட்டும் எதிர்க்கவில்லை, நான் இந்தியன் ஸ்டாட்டை எதிர்க்கிறேன் என்று கூறினார். அந்த அளவுக்கு முழுமையான தேசத்துரோகியாக மாறிப்போன, காங்கிரஸ் இன்றைக்கு டெல்லியில் துடைத்தெறியப்பட்டு இருக்கிறது. மூன்றாவது முறையா ஜீரோ எம்எல்ஏ ஆட்சி வாங்கி இருக்கிற தலைவர் தான் ராகுல், பிரியங்கா வாட்ரா கம்பெனி என்பது தெள்ளத்தெளிவாக தெரிந்திருக்கிறது. ஒரு அரசியல் தலைவர் இப்படி எல்லாம் இருக்கக்கூடாது என்பதற்கு பெரிய உதாரணமாக இருந்தவர் அரவிந்த் கெஜ்ரிவால். ஏனென்றால் பக்கத்து மாநிலத்தையே விஷம் கலந்து விட்டார்கள் என்று கூறினார். இதையெல்லாம் தெரிந்து கொண்ட டெல்லி மக்கள் ஒரு திடமான முடிவை எடுத்திருக்கிறார்கள். பத்திரிக்கை நண்பர்கள் மூலமாக டெல்லி வாக்காளர் பெருமக்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். டெல்லியில் பாலம் தொகுதியில் தமிழர் என்கேவ் என்ற ஒரு பகுதியே உள்ளது. அங்கு நானும் மாநில தலைவர் அண்ணாமலையும் ஒரு பெரிய எழுச்சியையே கண்டோம். அங்கிருந்த மக்கள் நாங்கள் தாமரைக்கு மட்டும்தான் ஓட்டு போடுவோம் எனக் கூறினார்கள். அவர்களெல்லாம் ஆட்சி மாற்றம் வேண்டும் என நினைத்ததை கண்ணால் பார்க்க முடிந்தது. 1998 பிப்ரவரி 14 எல்.கே அத்வானி தேர்தல் பிரச்சாரத்திற்காக கோவை வந்த பொழுது, அவரை தாக்குவதற்காக 13 இடங்களில் சீரியல் பாம்கள் வைக்கப்பட்டன. அதில் 59 பேர் இறந்து போனார்கள் 200க்கும் மேற்பட்டோர் கை கால்களை இழந்து இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், அன்றைய தினம் ரத்தம் சதை ஆறாக ஓடிக்கொண்டிருந்ததை என் கண்களால் பார்த்தேன். அந்தக் கோரமான பயங்கரவாத சம்பவத்தை எதிர்த்து, ஒவ்வொரு ஆண்டும் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும், அது இந்த முறை ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.
கோவை: பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது!!!
2/08/2025
0
