நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவியரின் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, கதை சொல்லும் போட்டி, தமிழ் பாடல்கள் பாடும் போட்டி என பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியில் தமிழ் எழுத்துகளின் பதாகைகளை மாணவ, மாணவியர் காட்சிப்படுத்தினர். கலை ஆசிரியை திருமதி.முனீஸ்வரி நிகழ்ச்சயை தொகுத்து வழங்கினார். மேலும், தமிழ் ஆசிரியைகள் ஜாக்கியா, திவ்யா மாணவ, மாணவியர் அச்சமின்றி மேடையில் பாட, ஆட, பேச பயிற்சி வழங்கினர். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு, ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர் எப்சிபா பாராட்டுரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் முடிவில் ஆசிரியை பிரியங்கா நன்றி நவில நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுப்பெற்றது.
நீலகிரி:YMCA மற்றும் பாவேந்தர் இலக்கிய பேரவை சார்பாக உலக அன்னை மொழி தினம் கொண்டாடப்பட்டது!!!!
2/21/2025
0
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு பிறகு YMCA பொருளாளர் திரு. தனசிங் இஸ்ரேல் வரவேற்புரை நிகழ்த்தினார். YMCA செயலாளர் திரு. மேக்ஸ் வில்லியர்ட் ஜெயபிரகாஷ் தனது சிறப்புரையில் வீடுதோறும் தாய்மொழி என்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். பாவேந்தர் இலக்கிய பேரவை தலைவர் திரு. ஜனார்தனன் பேசுகையில் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார்.
