இந்த அறுவை சிகிச்சை செய்யும் போது மூளைக்கு இரத்தம் செல்லாமல் இருக்க இதய அறுவைசிகிச்சை மருத்துவர்கள் மூலம் இதயத்தை தற்காலிகமாக நிறுத்தி இயந்திரம் மூலம் செயல்பட வைத்து மூளைக்கு இரத்தம் செல்வது தடுக்கப்பட்டது.வழக்கமாக மனித இதயத்தின் வெப்ப நிலை 34 டிகிரி செல்சியஸ் கொண்டதாக இருக்கும். இதனை 18 டிகரி செல்சியசாக குறைத்து மூளையில் அறுவை சிகிச்சை செய்வதற்கு வசதியாக மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் 20 நிமிடம் நிறுத்தப்பட்டது.பின்பு மூளையில் அறுவை சிகிச்சை மூலம் இரத்த குழாயில் ஏற்பட்ட வெடிப்பை சரிசெய்தனர். பிறகு மீண்டும் இதயத்தை வழக்கமான வெப்ப நிலைக்கு கொண்டு வந்து அதனை மீண்டும் செயல்பட வைத்தனர். இந்த முறையான அறுவை சிகிச்சை மிகவும் கடினமானதும் மற்றும் அரியதுமான ஒன்று.நாட்டிலேயே முதன் முறையாக இப்படிப்பட்ட அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இதன் மூலம்இம்மருத்துவமனை சாதனை படைத்துள்ளது என்றார்.இந்த அறுவை சிகிச்சை மூலம் குணமடைந்த நோயாளி முரளி கூறுகையில் எனக்கு தலையில்
பாதிப்பு ஏற்பட்டவுடன் நான் சுய நினைவை இழந்தேன். எனது குடும்பத்தினர் என்னை குப்பம்பகுதியிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அந்த மருத்துவமனையில் என் நிலைமை மோசமாக உள்ளதாகவும் உடனே வேலூர் நறுவீ மருத்துவமனைக்கு செல்லும்படி கூறியதால் நான் இங்கு வந்து சிகிச்சை சேர்ந்தேன். அதை தொடர்ந்து இம்மருத்துவமனை மருத்துவர்கள் எனக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளித்து என் உயிரை காப்பாற்றினர்.இப்போது நான் முழு உடல் நலம் பெற்று எனது அலுவலகப் பணியை சிறப்பாக செய்து வருகிறேன் என்றார்.
இந்த அரிய வகை அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து நோயாளின் உயிரை காப்பாற்றிய மருத்துவ குழுவினரை மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் அதன் தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் பாராட்டினார். இந்நிகழ்வில் நறுவீ மருத்துவமனை மருத்துவ சேவைகள் தலைவர் டாக்டர் அரவிந்தன் நாயர்,மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜேக்கப் ஜோஸ் மற்றும் நோயாளியின் குடும்பத்தினர் உடன் இருந்தனர்.
