புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் அதிமுக சார்பில் நேற்று முன்தினம் எம்ஜிஆர் சிலையை அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் திறந்து வைத்த நிலையில், திறந்தப்பட்ட சிலைக்கு இன்று மீண்டும் திறப்பு விழா நடத்த ஓபிஎஸ் அணியினர் முயன்றதால் அதிமுக மற்றும் ஓபிஎஸ் அணியினரிடையே மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது.காவல்துறையினர் ஓபிஎஸ் அணியினரிடம் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் நடந்து கொண்டால் கைது செய்யப்படுவார்கள் என தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வந்த நிலையில் அவர்கள் கலைந்து செல்லாததால் ஓபிஎஸ் அணியினர் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.அதிமுகவினர் மற்றும் ஓபிஎஸ் அணியினர் இடையேயான மோதல் போக்கு காரணமாக வில்லியனூர் புறவச்சாலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலை திறப்பு விவகாரம் அதிமுக மற்றும் ஓபிஎஸ் அணியினர் இடையே மோதல் போக்கு காரணமாக ஓபிஎஸ் அணியினர் கைது!!!
3/02/2025
0
