கோவை தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையை இந்த அளவுக்கு தரம் தாழ்த்தி பேசுவதா ? வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ காட்டம் !!!

sen reporter
0



 


கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற (தளம்) சுய உதவிக் குழுவினருக்கான நிதி மேலாண்மை பயிற்சி கூட்டத்தில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., கலந்து கொண்ட அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது :கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அரசாங்கத் துறைகளை பல்வேறு மாற்றங்களை பிரதமர் மோடி கொண்டு வந்து இருக்கிறார். Reform மற்றும் transform நடந்து இருக்கிறது. இது இரண்டும் நடக்கும் போது பிரைம் மினிஸ்டர் பெர்ஃபார்மும் செய்து கொண்டு இருக்கிறார். இந்தியா வல்லரசு ஆக வேண்டும் என்பதற்காக மத்திய அரசு, மாறி வரக் கூடிய உலக சூழ்நிலைகளுக்கு ஏற்ப கல்வி திட்டம் முதற் கொண்டு, அரசாங்கத்தினுடைய பல்வேறு கொள்கை முடிவுகள் வரை பெரிய மாற்றத்தை இங்கு அமல்படுத்திக் கொண்டு இருக்கிறது. அந்த வகையில் பெண்களுக்காக மட்டும் அல்ல புதிய கல்விக் கொள்கை வாயிலாக, இந்திய நாட்டில் இருக்கிற மாணவர்கள் அத்துணை பேரும்  ஒரே கருத்தோடு கல்வி பயில வேண்டும், உள்ளூரில் தேவைகளை புரிந்து கொண்டு அந்த தொழில்களை எல்லாம் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு, அதே போல இந்த நாடு பல்வேறு மொழிகளை பேசுகிற நாடு, அதனால் இங்கு மூன்று மொழிகளை கற்றுத் தர வேண்டும் என்ற புதிய கல்வி கொள்கையை ஒட்டி, தமிழகத்திலும் அதற்கான ஒரு முயற்சியை மேற்கொள்ள பிரதமர் மோடி கல்வித் துறை வாயிலாக ஒரு மாற்றத்தை கொண்டு வர நினைக்கிறார். இந்த மாற்றம் என்பது புதிதான மாற்றம் அல்ல, ஏற்கனவே தனியார் பள்ளிகள்  வசதி வாய்ந்த பெற்றோர்கள் தங்களுடைய பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு பல்வேறு மொழிகளை கற்றுக் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். 

ஆனால் அரசாங்க பள்ளி மாணவர்கள் தற்போது வரை இரண்டு மொழி மட்டுமே கற்றுக் கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கும் அந்த வாய்ப்பினை ஏற்படுத்தித் தர வேண்டும், இது கட்டாயமும் அல்ல.ஏனென்றால் திராவிட முன்னேற்ற கழக அரசு மீண்டும் ஒருமுறை பொது மக்களை திசை திருப்ப முயல்கிறார்கள். இந்தி என்பது இங்கு நிச்சயமாக கட்டாயம் அல்ல, இங்கு இந்தி மொழி திணிக்கப்படுகிறது. என்ற பிம்பத்தை முதலமைச்சர் மற்றும் மற்ற தலைவர்களும் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். இது உண்மையல்ல ஏற்கனவே தனியார் பள்ளி மாணவர்கள் மூன்று மொழிகளை கற்று வருகிறார்கள். அவர்களுக்கு கிடைக்கின்ற வாய்ப்பு அரசாங்க பள்ளி, ஏழை மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பது மட்டும் தான் பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடு. அதே போல தொகுதி வரையறை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் என்ற ஒரு நாடகம் நடத்துவதற்கு மாநிலத்தின் முதல்வர் தயாராகிக் கொண்டு இருக்கிறார். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் கோவையில் பேசுகிற போது, அது மாதிரியான எந்த ஒரு வரையறையும் இல்லை என்றும். ஒரு போதும் மாநிலங்களின் எம்.பி க்களின் எண்ணிக்கை குறையாது என்று உறுதிமொழியும் கொடுத்து இருக்கிறார்.

 இதற்குப் பின்னரும் கூட அனைத்து கட்சி கூட்டம் ஏதோ ஒரு அணியில் அவர் பின்னால் அனைவரும் நிற்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக மாநிலத்தின் முதல்வர் எந்த அடிப்படையில் இல்லாமல், எந்த ஆதாரமும் இல்லாமல் தொகுதி வரையறை, என்கின்ற ஒரு பூச்சாண்டியை காட்டுவதற்கு முயற்சி செய்கிறார்.அதனால் அரசாங்கத்தின் தோல்விகளை மறைப்பதற்காக, சட்டம் ஒழுங்கு பிரச்சனையின் தோல்வியை மறைப்பதற்காக, பெண்களுக்கு ஒவ்வொரு நாளும் ஏற்பட்டுக் கொண்டு இருக்கிற பாலியல் ரீதியான தொல்லைகளை மறைப்பதற்கான, இவை அனைத்தையும் எப்படியாவது மக்கள் மன்றத்தில் இருந்து மாற்றிவிட முடியும் என்ற நம்பிக்கையோடு தொகுதி வரையறை, இந்தி திணிப்பு, போன்ற நாடகங்களை திராவிட முன்னேற்றக் கழகம் இப்போது மேற்கொள்ள முயற்சி செய்கிறது. ஒருபோதும் தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள். 

நீங்கள் என்ன தான் கூகுரல் இட்டாலும் உண்மை ஒருபோதும் மறையாது. பாரதிய ஜனதா அத்தனை விஷயங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும், கொண்டு சேர்ப்பதற்கும் தயாராக உள்ளது என்று கூறினார்.தி.மு.க வினர் தரம் தாழ்ந்து பேசுகிறார்களே என்ற கேள்விக்கு, பதில் அளித்தவர்,திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாரம்பரியமே தனிப்பட்ட முறையில் தரம் தாழ்ந்து பேசுவது தான். ஒரு இந்திய ஆட்சி பணியிலே, அதுவும் தன்னுடைய கரியரில் நல்ல பெயரை எடுத்தவர் அண்ணாமலை. ஒரு அரசு உயர் பதவியில் தகுதி வாய்ந்த இடத்தில் இருக்கக் கூடிய அதுவும் ஒரு தேசியக் கட்சியினுடைய மாநில தலைவரை பார்த்து இந்த அளவுக்கு தரம் தாழ்ந்த விமர்சனத்தை எல்லாம் இவர்கள் வைக்கிறார்கள் என்றால், அவர்களின் தரம் அவ்வளவு தான் என்று கூறினார். த. வெ.க இரண்டாம் ஆண்டு விழாவில் பாதுகாவலர் அனுமதிக்காமல் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது அது குறித்து தற்பொழுது வரை த.வெ.க தலைவர் விஜய் தற்பொழுது வரை வருத்தம் தெரிவிக்காமலும், கண்டுகொள்ளாமலும் இருப்பது குறித்தான கேள்விக்கு பதில் அளித்தவர்,அவர் தற்பொழுது தான் அரசியல் கட்சியே ஆரம்பித்து இருக்கிறார், இனி வரக் கூடிய காலத்தில் பத்திரிகையாளர்களும் ஒரு அங்கம் என்பதை புரிந்து கொண்டு நடக்க வேண்டும். ப்ரோ என்று விஜய் அன்புமணி, அண்ணாமலை ஆகியோரையெல்லாம் குறிப்பிடுவது குறித்தான கேள்விக்கு, அதே போல அவர்கள் அனைத்திற்கும் என்ன சார் செய்வார்கள், ப்ரோ என்று கூறினார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top